இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'படையப்பா'. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க, சௌந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் ரம்யா கிருஷ்ணன் இரண்டாவது நாயகியாக நடிக்க, சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, சத்யபிரியா, மன்சூர் அலிகான், உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் இணைந்து நடித்திருந்தது.