சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த தமிழ் ஹீரோயின்கள்!

Published : Feb 17, 2025, 03:40 PM IST

சிக்ஸ் பேக்ஸ் என்றாலே ஹீரோக்கள் தான் வைப்பார்கள் என்கிற பிம்பத்தை தகர்த்தெறிந்து மாஸ் காட்டிய ஹீரோயின்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
சிக்ஸ் பேக்ஸ் வைத்து ஹீரோக்களுக்கே டஃப் கொடுத்த தமிழ் ஹீரோயின்கள்!
சிக்ஸ் பேக்ஸ் வைத்த ஹீரோயின்கள்

சினிமாவில் ஹீரோக்கள் கட்டுமஸ்தான் உடற்கட்டுடன் வலம் வருவதை பார்த்திருக்கிறோம். அதிலும் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து சிக்ஸ் பேக்ஸ் வைப்பதை லட்சியமாக கொண்ட ஹீரோக்களும் இங்கு ஏராளம். சூர்யா தொடங்கி, சரத்குமார், விஷ்ணு விஷால், ஆர்யா, விஷால் என சிக்ஸ் பேக்ஸில் வலம் வந்த ஹீரோக்களை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஹீரோயின்கள் சிக்ஸ் பேக்ஸ் வைத்திருப்பது பெரியளவில் பேசப்படுவதில்லை. அந்த வகையில் சிக்ஸ் பேக்ஸ் வைத்துள்ள தமிழ் ஹீரோயின்கள் பற்றி பார்க்கலாம்.

26
நயன்தாரா

கோலிவுட்டில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா, சினிமாவுக்கு வந்த புதிதில் கொழுகொழுவென இருந்த இவர், பின்னர் அஜித்தின் பில்லா படத்துக்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆனார். போகப் போக விஷால் உடன் சத்யம் படத்தில் நடித்த போது அவருக்கு போட்டியாக சிக்ஸ் பேக்ஸ் வைத்து செம கிளாமராக நடித்திருந்தார் நயன்.

36
சமந்தா

நடிகை சமந்தாவும் ஒரு பிட்னஸ் பிரீக் தான். தினமும் தவறாமல் ஒர்க் அவுட் செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். அவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு வந்தும் அதில் இருந்து சீக்கிரம் குணமடைந்ததற்கு அவரின் பிட்னஸும் ஒரு காரணம். இவரும் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுடன் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... சமந்தா போன் வால் பேப்பரில் இருப்பது யாருடைய புகைப்படம் தெரியுமா?

46
டாப்ஸி

வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தின் மூலம் பேமஸ் ஆனவர் டாப்ஸி. இவர் பாலிவுட்டுக்கு போனதும் தன்னுடைய பிட்னஸிலும் கவனம் செலுத்த தொடங்கினார். அதன் எதிரொலியாக அவர் சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறி இருக்கிறார். தீவிர டயட் பின்பற்றி இந்த அளவு உடம்பை மெருகேற்றி வைத்திருக்கிறார் டாப்ஸி.

56
தீஷா பதானி

சூர்யா நடித்த கங்குவா படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் தீஷா பதானி. இவரும் ஒரு பிட்னஸ் பிரியை தான். உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் தீஷா பதானி, சிக்ஸ் பேக்ஸ் உடற்கட்டுக்கு மாறியது மட்டுமின்றி அதை பல வருடங்களாக மெயிண்டெய்ன் செய்து வருகிறார்.

66
சாக்‌ஷி அகர்வால்

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் சாக்‌ஷி அகர்வால். தினந்தோறும் உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் சாக்‌ஷிக்கும் சிக்ஸ் பேக்ஸ் உள்ளது. அதனுடன் அவர் ஏராளமான போட்டோஷூட்டும் நடத்தி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்...  கிரீன் டிரெஸில் கிளாமர் குயினாக கிக் ஏற்றும் சாக்‌ஷி அகர்வால்

Read more Photos on
click me!

Recommended Stories