Sudha Kongara released Sivakarthikeyan's Parasakthi Shooting Video : சிவகாத்திகேயன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து ஹேப்பி பர்த்டே ஹீரோ என்று சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!
Sudha Kongara released Sivakarthikeyan's Parasakthi Shooting Video : மாஸ் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் பராசக்தி இயக்குநர் சுதா கொங்கரா தன் பங்கிற்கு பராசக்தி படத்தின் ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுதா கொங்கரா கூறியிருப்பதாவது: ஹேப்பி பர்த்டே ஹீரோ.
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!
உங்களுடன் பணிபுரிவது முழுமையான மகிழ்ச்சி. இறுதியாக பயணம் மற்றும் நிறுவனம் இணைந்து தான் ஒருவரை தொடர்ந்து சினிமா எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தூண்டும் என்று பதிவிட்டுள்ளார். இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து முதல் முறையாக பராசக்தி படத்தில் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் டைட்டில் பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடைசியாக அதற்கு முடிவு கட்டப்பட்டது.
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!
பராசக்தி சிவகார்த்திகேயனின் 25ஆவ்து படம். இந்தப் படத்தில் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். மேலும், அதர்வா, ஸ்ரீலீலா, தேவ் ராம்நாத் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுனம் இந்த படத்தை தயாரிக்கிறது. ரூ.250 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் ஹிந்தி எதிர்ப்பு போராட்ட கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!
இந்தப் படம் குறித்து பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, சூரரைப் போற்று மற்றும் இறுதிச்சுற்று ஆகிய படங்களை விட சிறப்பான படமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார். சுதா கொங்கரா பகிர்ந்த வீடியோவில் ஒவ்வொரு சீனையும் சொல்லிக் கொடுக்க அதனை அப்படியே உள்வாங்கிக் கொள்ளும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பராசக்தி ஷூட்டிங் வீடியோவை பகிர்ந்து சிவகார்த்திகேயனை புகழ்ந்து பேசிய சுதா கொங்கரா!
அமரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிட்டது. இதுவரையில் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் எந்தப் படமும் ரூ.300 கோடியை தொட்டது இல்லை. அந்த சாதனையை அமரன் படைக்கவே இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி படத்திலும் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு மதராஸி என்று டைட்டில் வைத்து படக்குழு டைட்டில் கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது.