Daali Dhananjaya: பிரபலங்கள் கலந்து கொண்ட 'புஷ்பா 2' பட நடிகர் டாலி தனஞ்செயா திருமண புகைப்படங்கள்!

Published : Feb 17, 2025, 03:14 PM IST

புஷ்பா 2 படத்தில் நடித்திருந்த கன்னட நடிகர் டாலி தனஞ்செயா, டாக்டர். தன்யதா கௌரகளரை மைசூரில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.  

PREV
110
Daali Dhananjaya: பிரபலங்கள் கலந்து கொண்ட 'புஷ்பா 2' பட நடிகர் டாலி தனஞ்செயா திருமண புகைப்படங்கள்!
டாலி தனஞ்செயா திருமணம்

சமூக ஊடகங்களில் டாலி தனஞ்செயா மற்றும் டாக்டர். தன்யதா கௌரகளரின் திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்களை குவித்து வருகிறது.
 

210
திருமண புகைப்படங்கள் வைரல்

திருமணத்திற்கு டாலி தனஞ்செயா, அவரின் குடும்ப பாரம்பரிய படி பட்டு வேஷ்டி மற்றும் குர்தா அணிந்திருந்தார் தலையில் தலைப்பாகையோடு காணப்படுகிறார்.


 

310
டாலி தனஞ்செயாவின் திருமண உடை

டாலியை திருமணம் செய்து கொண்டுள்ள, மணமகளான டாக்டர். தன்யதா கௌரகளர் அடர் சிவப்பு பார்டருடன் கூடிய தங்க நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கிறார்.
 

410
மணப்பெண் தன்யதா கௌரகளர்

டாலி மற்றும் தன்யதாவின் திருமணம், மைசூர் கண்காட்சி மைதானத்தில் மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் பிரபலங்கள் சிலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தி உள்ளனர்.
 

510
திருமணம்

திருமணத்திற்குப் பிறகு, இந்த ஜோடி ஒரு பிரமாண்ட திருமண வரவேற்பை ஒன்றையும் நடத்தியுள்ளனர். இதில் திரைப்படத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருமணத்தில் பாரம்பரிய உடையில் காணப்பட்ட இருவரும், வரவேற்பு நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் ஜொலித்தனர்.
 

610
பிரமாண்ட திருமண வரவேற்பு

திருமணத்திற்குப் பிறகு, இந்த ஜோடி ஒரு பிரமாண்ட திருமண வரவேற்பை நடத்தியது, இதில் திரைப்படத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

710
'புஷ்பா 2'வில் ஜாலி ரெட்டி

39 வயதாகும் டாலி தனஞ்செயா, கடந்த ஆண்டு வெளியாகி 1800 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த, அல்லு அர்ஜுனின் பிளாக்பஸ்டர் படமான 'புஷ்பா 2: தி ரூல்' படத்திலும் நடித்திருந்தார்.
 

810
பிற படங்களில் டாலி

டாலி தனஞ்செயா, கன்னடத்தில் நடித்த  'பாக்ஸர்', 'ஹேப்பி நியூ இயர்', 'போகரு', தெலுங்கில் 'புஷ்பா: தி ரைஸ்' மற்றும் தமிழில், கடந்த ஆண்டு வெளியான விக்ரம் பிரபுவின் 'பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார்.
 

910
தயாரிப்பாளர் டாலி

நடிகர் என்பதை தாண்டி டாலி தனஞ்செயா, நாகபூஷன், அமிர்தா பிரேம் மற்றும் தாரா போன்ற நடிகர்கள் நடித்த Tagaru Palya என்ற கன்னடப் படத்தைத் தயாரித்துள்ளார்.
 

1010
வரவிருக்கும் படம் 'உத்தரகாண்ட்'

இவர் நடிப்பில் அடுத்ததாக, சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் பாபு மற்றும் யோகேஷ் பட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள கன்னட ஆக்‌ஷன் டிராமா படமான 'உத்தரகாண்ட்' படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!

Recommended Stories