சனிக்கிழமை எபிசோடில், சாமுண்டீஸ்வரி வீட்டுக்கு புடவைகளோடு வந்த நிலையில், பாட்டியால் ராஜ ராஜராஜன் செய்யும் தில்லு முல்லு மற்றும், இதை தொடர்ந்து இன்று நடக்க போவது பற்றி பார்க்கலாம்.
மாயா - மகேஷின் கள்ள உறவு பற்றி டாக்டர் மூலம் உண்மையை தெரிந்து கொண்ட சாமுண்டீஸ்வரி, மாயா வீட்டுக்கு வந்ததை பார்த்துவிட்டு உச்சகட்ட கோவம் அடைகிறாள். ஆனால் இதை அவர் வெளிகாட்டிக்கொள்ளாமல் உனக்கு பிடித்த புடவையை எடுத்துக்கோ என சொல்ல எல்லோரும் புடவை எடுப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.