AGS Archana: 4 பிக் ஹீரோசை நம்பி ரூ.1000 கோடியை உள்ளே இறக்குகிறதா AGS? ரிஸ்க் எடுக்கும் அர்ச்சனா கல்பாத்தி!

Published : Feb 17, 2025, 04:51 PM IST

ஏஜிஎஸ் நிறுவனத்தின் மெகா திட்டம் குறித்த தகவல், தற்போது வெளியாகி உள்ளது. மிக குறுகிய காலத்தில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக வளர்த்துள்ள AGS நிறுவனம் இன்னும் 3 வருடங்களில் 800 முதல் 1000 கோடி செலவு செய்து திரைப்படங்கள் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.  

PREV
15
AGS Archana: 4 பிக் ஹீரோசை நம்பி ரூ.1000 கோடியை உள்ளே இறக்குகிறதா AGS?  ரிஸ்க் எடுக்கும் அர்ச்சனா கல்பாத்தி!
AGS நிறுவனம் பற்றிய தகவல்:

2006 ஆம் ஆண்டு கல்பாத்தி அகோரம் குழுவினரால் துவங்கப்பட்டது தான் ஏஜிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தை, கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் அர்ச்சனா கல்பாத்தி ஆகிய நான்கு பேர் முதலீட்டாளர்களாக உள்ளனர். இந்த நிறுவனத்தை தற்போது அர்ச்சனா கல்பாதி தான் மேனேஜ் செய்து வருகிறார்.

2006 ஆம் ஆண்டு இயக்குனர், சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன் ஹீரோவாக நடித்த வெளியான 'திருட்டு பயலே' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானது AGS நிறுவனம். இந்த படத்தில் சோனியா அகர்வால் ஹீரோயினாக நடிக்க, மாளவிகா முக்கிய ரோலில் நடித்திருந்தார். பிரபல பிஸ்னஸ்மேனின் மனைவி அவரின் நண்பருடன் வைத்திருக்கும் பழக்கத்தை, ஹீரோ கண்டுபிடிக்க பணம் பறிக்கும் நோக்கத்தில் அதை வீடியோ எடுக்கிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியாத கதைக்களத்தோடு இயக்குனர் கூறி இருந்தார்.
 

25
முதல் படத்திலேயே வெற்றி பெற்ற AGS நிறுவனம்:

முதல் தயாரிப்பிலேயே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியடைந்த படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம், இதைத்தொடர்ந்து தெலுங்கில் இருந்து ரீமேக் செய்யப்பட்ட சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தை தயாரித்தனர். இந்த படத்தை மோகன் ராஜா இயக்க, ரவி மோகன் ஹீரோவாக நடித்திருந்தார். அதே போல் ஜெனிலியா ஹீரோயினாக நடித்திருந்தார். தற்போது வரை பல இளம் ரசிகர்களால் இந்த படம் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

100ஆவது நாளை நிறைவு செய்த விஜய்யின் கோட்: சிறப்பு காட்சிகளுடன் கொண்டாடும் ஏஜிஎஸ் நிறுவனம்!

35
400 கோடி பட்ஜெட்டில் 'கோட்' படத்தை தயாரித்திருந்தது

அடுத்தடுத்தது இரண்டு வெற்றியை கொடுத்த ஏஜிஎஸ் நிறுவனம் நகுல் - சுனைனா நடித்த மாசிலாமணி திரைப்படத்தின் தோல்வியால் முதல் அடியை வாங்கியது. பின்னர் கதைகளில் கூடுதல் கவனம் செலுத்திய அர்ச்சனா கல்பாத்தி இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், பலே பாண்டியா,  எங்கேயும் காதல், யுத்தம் செய், அவன் இவன், உள்ளிட்ட சுமார் 27 படங்களை தயாரித்துள்ளனர். இதில் சில படங்கள் தோல்வியை தழுவினாலும், பல படங்கள் இவருக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று தந்தது.

கடந்த ஆண்டு தளபதி விஜயை வைத்து, 400 கோடி பட்ஜெட்டில் 'கோட்' படத்தை தயாரித்திருந்தது ஏஜிஎஸ் நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு பிக் பட்ஜெட் படங்கள் மட்டும் இன்றி, இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கடந்த ஆண்டு 2023-ல் வெளியான லவ் டுடே திரைப்படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி வரை லாபத்தை பெற்று தந்தது. 
 

45
ரூ.800 முதல் 1000 கோடி பட்ஜெட் செலவில் 4 படங்கள்:

இந்நிலையில் AGS நிறுவனம் அடுத்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.800 முதல் 1000 கோடி பட்ஜெட் செலவில் 4 முன்னணி ஹீரோக்களை வைத்து, மிகப்பெறிய ஸ்கெச் ஒன்றை போட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி AGS நிறுவனம் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கி முடித்துள்ள கையேடு, இந்த படத்தை தொடர்ந்து, ரவி மோகன் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் நடித்துள்ள தனி ஒருவன் 2 படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். 

Actor Vijay: அட்ரா சக்க... தளபதி பட வாய்ப்பை தட்டி தூக்கிய அட்லீ!! மீண்டும் இணையும் மாஸ் காம்போ!!

55
சிம்புவின் 51:

ஹிந்தியில் லவ் யப்பா படம் மூலம் காலடி எடுத்து வைத்து, ஆரம்பத்திலேயே சாறுகளை சந்தித்து இருந்தாலும் தன்னுடைய அடுத்த படத்தை அக்ஷய் குமாரை வைத்து தயாரிக்க உள்ளது. இந்த படத்தை அட்லீ இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சிம்புவின் 51-ஆவது படத்தையும் தயாரிக்க உள்ள AGS நிறுவனம், சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள முக்கிய படத்தையும் தயாரிக்கிறதாம். இந்த படம் குறித்து அடுத்தடுத்த தகவலைகள் வெளியாக உள்ளதாம். இதை தவிர 50 கோடிக்கு கீழ் எடுக்கப்பட உள்ள சில ஸ்மால் பட்ஜெட் படங்களையும் தயாரிக்க உள்ளது. 

இப்படி இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள படங்களின் பட்ஜெட் மட்டும் மொத்தமாக 800 முதல் 1000 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அர்ச்சனா கல்பாத்தி நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

click me!

Recommended Stories