நடிகர் விஜயகுமாரும், நடிகை மஞ்சுளாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஏற்கனவே முத்துக்கண்ணு என்கிற மனைவி இருக்கும் நிலையில் மஞ்சுளாவை இரண்டாம் தாரமாக கரம்பிடித்தார் விஜயகுமார். இந்த ஜோடிக்கு மொத்தம் மூன்று மகள்கள். அதில் மூத்த மகள் வனிதா விஜயகுமார், இரண்டாவது மகள் ப்ரீத்தா ஹரி, மூன்றாவது மகள் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர்கள் மூவருமே தன் தாயை போல சினிமாவில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்கள்.
24
ஸ்ரீதேவி விஜயகுமார் நடித்த படங்கள்
நடிகை மஞ்சுளாவுக்கு நடிகை ஸ்ரீதேவி என்றால் ரொம்ப பிடிக்குமாம். அதன்காரணமாகவே தன்னுடைய கடைசி மகளுக்கு ஸ்ரீதேவி என பெயர்சூட்டி இருக்கிறார். ஸ்ரீதேவி தமிழ் சினிமாவில் நடித்த தித்திக்குதே, பிரியமான தோழி, தேவதையைக் கண்டேன் ஆகிய மூன்று படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இதனால் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரீதேவி, கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டே விலகினார்.
அதன்பின்னர் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்தாலும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அதன்படி விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் ஜோடி ஆர் யூ ரெடி என்கிற நடன நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார் ஸ்ரீதேவி. அவருடன் சாண்டி மாஸ்டர் மற்றும் நடிகை ரம்பா ஆகியோரும் நடுவராக உள்ளனர். ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இதுவாகும். இதன் முதல் சீசனிலும் ஸ்ரீதேவி தான் நடுவராக இருந்தார்.
44
ஸ்ரீதேவி விஜயகுமார் போட்டோஸ்
நடிகை ஸ்ரீதேவிக்கு திருமணமாகி குழந்தை பிறந்தாலும் இன்னும் இளமை மாறாமல் ஹீரோயின் போலவே இருக்கிறார். விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தும் அவர், அதன் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற மாடர்ன் உடையில் ஸ்ரீதேவி நடத்தியுள்ள போட்டோஷூட்டை பார்த்த ரசிகர்கள் அவர் மஞ்சக்காட்டு மைனா போல இருப்பதாக வர்ணித்து வருகின்றனர்.