Ayesha Zeenath Tamil Debut Movie : உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்து வந்த ஆயிஷா இப்போது ஹீரோயினாக அறிமுகமாகிறார். தமிழ் மட்டுமின்றி அவர் மலையாள படத்திலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?
கேரளா மாநிலம் காசர்கோடில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஆயிஷா ஜீனத். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரியாலிட்டி ஷோவான ரெடி ஸ்டெடி போ என்ற நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஒரு போட்டியளராக அறிமுகமானார். இதையடுத்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா என்ற தொடரில் நடித்தார். பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்ய்ப்பட்ட பொன்மகள் வந்தாள் என்ற தொடர் நடித்தார்.
25
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?
இப்படி ஒவ்வொரு தொடரிலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வந்த ஆயிஷாவிற்கு ஜீ தமிழில் வெளியான சத்யா என்ற தொடர் அவரை சத்யாவாக அடையாளம் காட்டியது. இந்த தொடர் மூலமாக ரசிகர்களின் அன்பையும், ஆதரவையும் பெற்றார். இதைத் தொடர்ந்து ராஜா மகள், செம்பருத்தி, சத்யா சீசன் 2 என்று பல தொடர்களில் நடித்தார்.
35
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?
இந்த நிலையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஆயிஷாவிற்கு வந்தது. இந்த சீசனி கிட்டத்தட்ட 62 நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடி 63ஆவது நாளில் வெளியேற்றப்பட்டார். கடந்த ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சமையல் எக்ஸ்பிரஸ் என்ற ஷோவை தொகுத்து வழங்கினார். ஒரு போட்டியாளராக அறிமுகமாகி தனக்கென்று தனி இடத்தை பிடித்து கொண்டு சின்னத்திரையில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளார்.
45
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?
இவ்வளவு ஏன் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான உப்பு புளி காரம் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். My Father Is Strange என்ற கொரியன் சீரிஸின் தமிழ் ரீமேக்காக இந்த சீரிஸ் வெளியாகி ரசிகர்களிடையே நலல் வரவேற்பு பெற்று முதல் சீசனை சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீரிஸ் 128 எபிசோடுகள் வரை ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஒரு சில குறும்படங்களிலும் நடித்திருக்கிறார். அதில் தாய்க்கு பின் தாரம், தி பாத் மற்றும் மெட்ராஸ் மலர் ஆகிய குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது தாரா என்ற வெப் சீரிஸ்லும் நடித்து வருகிறார்.
55
ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் போட்டியாளர் ஆயிஷா; யாரு அந்த ஹீரோ?
இந்த நிலையில் மலையாளத்தில் டாக்டர் பென்னட் என்ற படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகும் ஆயிஷா தமிழிலும் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குநர் ஜாபர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் மறைந்த நடிகர் ரகுவரனின் சகோதரர் ரமேஷ் மற்றும் புகழ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். இதில் ஆயிஷாவிற்கு ஜோடியாக விடாமுயற்சி, ராவண கோட்டம், இரும்புத்திரை போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவை 14ஆம் தேதி காதலர் தினத்தட்டு பிரபல புகைப்படக் கலைஞர் ஹரன் ரெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.