Jhanvi kapoor : தகதகனு மின்னும் தம்மாதூண்டு உடையில்... கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ஜான்வி கபூர்

First Published Jan 10, 2022, 9:20 AM IST

கிளாமராக போட்டோஷூட் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ள நடிகை ஜான்வி கபூர் (jhanvi kapoor), தற்போது தகதகனு மின்னும் உடையில் எடுத்த கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருவதோடு, ஏராளமான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து வைதுள்ளவர்.

தனது முதல் படமான 'தடக்' திரைக்கு வரும் முன்பே தாய் ஸ்ரீதேவி மரணமடைந்தது ஜான்வி கபூரை மிகவும் பாதித்தது.

அதில் இருந்து மீண்டு வந்த ஜான்வி கபூர், பாலிவுட்டில் அம்மா விட்டுச் சென்ற இடத்தை பிடிக்க முயற்சித்து வருகிறார்.

பொதுவாக திரையுலகின் வாரிசுகள் ஆரம்பகட்டத்தில் பல்வேறு கருத்துகளுக்கு ஆளாக்கப்படுவது வழக்கம். அவற்றைக் கடந்து சாதனைப் படைத்தவர்கள் சிலரே.

ஜான்வி கபூர் ஆரம்ப கட்டத்தில் இருந்து தனது அம்மாவின் நடிப்புக்கு இணையாக சிறந்த நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றார்.
 

மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் அம்மா மாதிரியே தென்னிந்திய கலாச்சாரத்தின் மீது அதிகம் பற்றுக்கொண்டவர். எனவே சேலை, விதவிதமான மாடர்ன் உடை என... தனக்கு பொருத்தமான உடைகளை தேர்வு செய்து போட்டோ ஷூட்டுகளை நடத்தி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஜான்வி கபூர், அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது தகதகனு மின்னும் உடையில் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி உள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளன.

click me!