இடுப்பை வளைத்து நெளித்து... சேலையில் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன் - கிக்கான கிளாமர் கிளிக்ஸ் இதோ

First Published Mar 22, 2023, 1:35 PM IST

சேலையில் வித விதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து நடிகை ஐஸ்வர்யா மேனன் நடத்தியுள்ள கிளாமர் போட்டோஷூட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யனும் குமாரு போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்து வந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான வீரா படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதையடுத்து சி.எஸ்.அமுதன் இயக்கிய தமிழ்படம் பார்ட் 2-வில் நாயகியாக நடித்தார் ஐஸ்வர்யா. இப்படத்தில் நடிகர் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா. இதன்பின் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக இவர் நடித்த நான் சிரித்தால் படம் தான் ஐஸ்வர்யா மேனனை பாபுலர் ஆக்கியது.

கடந்த 2020-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி இருந்தார் ஐஸ்வர்யா. இப்படத்தை சுந்தர் சி தயாரித்து இருந்தார். இதன்பின்னர் வேழம் என்கிற திரில்லர் படத்தில் நடிகர் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடித்திருந்தார். இப்படம் கடந்தாண்டு ரிலீஸ் ஆனது.

இதையும் படியுங்கள்... துணை நடிகர்களிடம் கமிஷன் அடிச்சிருக்கான்... இப்படி பண்ணா விளங்குமா? - அட்லீயை டார்டாராக கிழித்த கே.ராஜன்

இதையடுத்து அருண்விஜய்யின் தமிழ்ராக்கர்ஸ் வெப்தொடரில் நடித்த இவர், தற்போது தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அங்கு கேரி இயக்கும் ஸ்பை என்கிற படத்தில் நிகில் சித்தார்த்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா மேனன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பிசியான ஹீரோயினாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது உகாதி பண்டிகைக்காக சேலையில் கவர்ச்சி பொங்க போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யாவின் இந்த லேட்டஸ்ட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... பேஷன் ஷோவுக்கு தங்க நெக்லஸ் போட்டுட்டு வந்தது குத்தமா? நடிகை டாப்ஸியை ரவுண்டு கட்டி விளாசும் நெட்டிசன்கள்

click me!