
பிரபல மலையான நடிகையான ஹனி ரோஸ், 2005-ல் நடிகையாக அறிமுகமானவர். பின்னர் தமிழில் முதல் கனவே என்கிற படத்தில் நடித்த இவருக்கு, சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் தமிழில் இவர் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த படம் மட்டுமே கவனம் பெற்ற நிலையில், அடுத்தடுத்து வெளியான படங்கள் பெரிதாக பேசப்படாமல் போனது.
அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் ஹனி ரோஸ் கடந்த 2023-ஆம் ஆண்டு பாலையாவுக்கு அம்மா கேரக்டரில் நடித்தார். இந்த படத்தில் இவரை விட மூத்த வயதுடைய ஸ்ருதி ஹாசன் பாலையாவுக்கு ஜோடியாக நடித்த நிலையில் இவர், அம்மாவாக நடித்தது சில விமர்சனங்களுக்கு ஆளானது. இந்த படத்திற்கு பின்னர் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதே போல் சமூக வலைத்தளத்திலும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதே போல் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
நடிகர் பிரபுவுக்கு என்ன ஆச்சு? மூளையில் நடந்த அறுவை சிகிச்சை - வெளியான பரபரப்பு தகவல்!
இந்நிலையில் இவர் முவைத்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பல மேடைகளில் தன்னை இரட்டை அர்த்த வார்த்தைகளால் வேண்டுமென்றே அவமானப்படுத்தும் நபருக்கு எதிராக நடிகை ஹனி ரோஸ் தன்னுடைய கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த நபரின் பெயரைக் குறிப்பிடாமல் கடுமையான வார்த்தைகளில் ஹனி ரோஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே அந்த நபர் வர முயற்சிக்கிறார். எங்கு பேச வாய்ப்பு கிடைத்தாலும், பெண்மையை அவமானப்படுத்தும் விதத்தில் என் பெயரை ஊடகங்களில் கூறுகிறார் என்று ஹனி ரோஸ் கூறுகிறார். அதே போல் இரட்டை அர்த்த வார்த்தைகளால் வேண்டுமென்றே தொடர்ந்து என்னை அவமானப்படுத்த முயற்சிக்கும்போதும் நான் எதிராக கருத்துக்களை வைப்பேன் என தன்னுடைய கோவத்தை ஹனி ரோஸ் வெளிப்படுத்தியுள்ளார்.
போன மாசம் 2 கோடிக்கு போட் ஹவுஸ்; இந்த மாசம் சொகுசு கார் வாங்கிய ஆல்யா மானசா - குவியும் வாழ்த்து!
அந்த நபர் தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைத்தபோது, நான் செல்ல மறுத்ததற்குப் பழிவாங்கும் விதமாக நான் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு வேண்டுமென்றே வர முயற்சிக்கிறார் என கூறியுள்ள நடிகை ஹனி ரோஸ், பணபலத்தால் எந்தப் பெண்ணையும் ஒருவர் அவமானப்படுத்த முடியுமா? அதை எதிர்க்க இந்திய நீதி அமைப்பு எந்தப் பாதுகாப்பையும் வழங்கவில்லையா என்று கேட்டால், இந்த நபரின் செயல்களில் இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண்களுக்கு எதிராக பாலியல் ரீதியான (sexually coloured remarks) நோக்கத்துடன் பேசுவது மற்றும் அதே நோக்கத்துடன் பின்தொடர்வது, போன்ற குற்றங்கள் அடங்கும்.
நான் தனிப்பட்ட முறையில், அவர் ஒரு மனநிலை சரியில்லாதவர் போல் பேசுவதால், பிதற்றல்களை வெறுப்புடனும், அனுதாபத்துடனும் புறக்கணித்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளேன். அதற்கு எனக்கு அவரை எதிர்க்க திறன் இல்லை என்று அர்த்தமல்ல. என ஹனி ரோஸ் கூறியுள்ள தகவல் தற்போது பரபரப்பாக பார்க்கப்படுகிறது. நெட்டிசன்கள் பலர் ஹனி ரோஸ் குறிப்பிட்ட அந்த நபர் யார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டிக்கெட் டூ பினாலே வெற்றியாளரை அறிவிக்க - பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து அறிவித்த விஜய் சேதுபதி! புரோமோ