thug life
2025 தென்னிந்திய சினிமாவுக்கு ஒரு அற்புதமான ஆண்டாக இருக்கப் போகிறது. ஆம். பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் பல அற்புதமான படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளன. ஆக்ஷன்-பேக் த்ரில்லர்கள் முதல் வரலாற்று நாடகங்கள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கதைகள் வரை பல படங்கள் தயாராகி வருகின்றனர்.
உச்ச நடிகர்கள், சிறந்த இயக்குனர்கள் மற்றும் புதிரான கதைக்களங்களுடன், ரிலீஸுக்குத் திட்டமிடப்பட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் தென்னிந்தியப் படங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தக் லைஃப் :
தமிழ் சினிமாவின் இரண்டு மிகப்பெரிய ஆளுமைகளான கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. 1987-ம் ஆண்டு வெளியான நாயகன் படத்திற்கு பிறகு கமல் - மணிரத்னம் கூட்டணியில் இந்த படம் உருவாகி வருவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
coolie
கூலி
மாஸ்டர் மற்றும் விக்ரம் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ், லோகேஷ் தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினி உடன் கை கோர்த்துள்ளார். ரஜினியை வைத்து அவர் இயக்கி வரும் கூலி படம் 2025-ம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படம் இந்த ஆண்டு மே மாதம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது. யாக உள்ளது.
Game Changer
கேம் சேஞ்சர்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தற்போது கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். இது தான் அவர் தெலுங்கில் இயக்கும் முதல் படமாகும். இந்த படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரகனி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆக்ஷன் நிறைந்த அரசியல் திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படம் 2025-ன் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் வரும் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
L2 : Empuraan
.L2: எம்புரான்
நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கிய லூசிஃபர் படத்தின் 2-வது பாகமாக உருவாகி உள்ள எல்2: எம்புரான் படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும்.. இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஹித் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Toxic
டாக்சிக்
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் டாக்சிக். இந்த படமும் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படம் ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Kantara 1
காந்தாரா: அத்தியாயம் 1
காந்தாரா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இந்த படத்தின் முன் கதையாக காந்தாரா அத்தியாயம் 1 ஒன்று படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி வருகிறார். ரிஷாப் ஷெட்டி, ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். இந்த படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.