நடிகை ஹன்சிகா வேகமாக வளர ஹார்மோன் ஊசி போட்டுக் கொண்டதாக ஒரு தகவல், அவர் அறிமுகமான போதே பரபரப்பை கிளப்பிய நிலையில்... இது குறித்து ஏற்கனவே ஹன்சிகாவின் தாயார் கொடுத்த விளக்கத்தை தொடர்ந்து, தற்போது ஹன்சிகா முதல் முறையாக பேசி உள்ளார்.
முதல் படத்திலேயே, இவரது பப்லியான அழகும்... துறுதுறு பார்வையும்... கியூட் சிரிப்பும் ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்தது. எனவே அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். மிகக்குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகி இடத்தை பிடித்த ஹன்சிகா, நடிகர் சிம்புவின் காதல் சர்ச்சையிலும் சிக்கினார். இவர்களுடைய காதல் திருமணம் வரை சென்ற நிலையில், திடீரென இருவருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பிரேக்கப்புக்கு காரணமாக அமைந்தது.
அந்த வகையில் தற்போது படு ஸ்லிம்மாக மாறி காட்சியளிக்கிறார் ஹன்சிகா. எனினும் அவர் குண்டாக இருந்தபோது இருந்த அழகை, தற்போது மிஸ் செய்வதாக பல ரசிகர்கள் தங்களுடைய ஆதங்கத்தை அவ்வபோது தெரிவித்து வருகின்றனர்.
ஹன்சிகா தன்னுடைய திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை டிஸ்னி ஹாட் ஸ்டார் தளத்திற்கும் வழங்கி இருந்தார். இதில் தன்னை பற்றி பரவிய பல்வேறு வதந்திகள், காதல் சர்ச்சைகள் பற்றி பல்வேறு விஷயங்களுக்கு ஹன்சிகா விளக்கம் கொடுத்திருந்தார். இந்த வீடியோவில் ஹன்சிகாவின் தாயார், ஹன்சிகா நடிகையாக அறிமுகமான புதிதில் ஹார்மோன் இன்ஜெக்ஷன் எடுத்து கொண்டதாக பரவிய வதந்தி குறித்து பேசி விளக்கம் கொடுத்திருந்தார்.
இதுகுறித்து பேசியிருந்த அவர் ஹார்மோன் ஊசி போட்டிருந்தால், நான் டாட்டா டாடாவை விட பணக்காரராக இருந்திருப்பேன். இப்படி சொல்பவர்களுக்கு பொது அறிவு இல்லை என நினைக்கிறேன். என தெரிவித்திருந்தார். மேலும் பொதுவாகவே நாங்கள் பஞ்சாபை சேர்ந்தவர்கள் என்பதால், எங்கள் சமூகத்தை சேர்ந்த பெண்கள் மிகவும் சீக்கிரமாகவே வளர்ந்து விடுவார்கள். அந்த ஜீன் அவர்களுக்குள்ளேயே இருக்கிறது என தெரிவித்தார்.
வாவ்.. ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில்.. பட்டு புடவை அழகில் ஜொலிக்கும் அதிதி!
இதைத் தொடர்ந்து தற்போது ஹன்சிகா இந்த ஹார்மோன் ஊசி சர்ச்சை குறித்து முதல் முறையாக பேசியுள்ளார். இதுபற்றி ஹன்சிகா பேசுகையில், இன்று வரை என்னால் ஊசி போட்டுக்கொள்ள முடியாது. இவ்வளவு ஏன் டாட்டூஸ் கூட என்னால் போட முடியாது. காரணம் ஊசி என்றால் எனக்கு அவ்வளவு பயம். ஒரு தாய் ஏன் இப்படிப்பட்ட விஷயங்களை செய்ய வேண்டும் ?இது போன்ற விஷயங்களை பரப்புவதால் மக்கள் எங்களை பார்த்து பொறாமைப்படுவதாகவே நினைக்கிறேன். என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.