தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் சர்வானந்திற்கும் அவருடைய நீண்ட நாள் காதலியான ரஷிதா ரெட்டிக்கும் சமீபத்தில், மிக பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு, இவர்களை வாழ்த்தினர். குறிப்பாக நடிகர் சித்தார்த் - ஆதிதிராய் ஜோடி, சிரஞ்சீவி மற்றும் அவரின் மனைவி, ராம் சரணம் மற்றும் அவரின் மனைவி உபாசனா, ராணா, ஸ்ரீகாந்த் போன்ற பல பிரபலங்கள் இவர்களின் நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர்.