தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில், நயன்தாரா, திரிஷா, சமந்தா, போன்ற ஹீரோயின்களுக்கு நிகராக, முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அனுஷ்கா. இவரின் மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவிலில் வழிபாடு செய்த வீடியோவில், தற்போதைய தோற்றத்தை பார்த்து ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியாகி உள்ளனர்.
ஸ்லிம் ஃபிட் நடிகையாக இருந்த இவர், உடல் எடை கூட காரணமாக அமைந்தது 'இஞ்சி இடுப்பழகி' திரைப்படம் தான். உடல் பருமன் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட இந்த படத்திற்காக, அனுஷ்கா தன்னுடைய எடையை 30 கிலோவுக்கு அதிகமாக கூட்டினார். பின்னர் ஏற்றிய எடையை அவரால் குறைக்க முடியாமல் போனது. பாகுபலி படத்தில் இவரை ஒல்லியாக சில ஸ்பெஷல் எபக்ட்ஸ் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட அனுஷ்கா, தன்னுடைய குடும்பத்துடன்... இந்த சிவராத்திரியை முன்னிட்டு வீட்டில் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயத்தில் நடந்த பூஜையில் கலந்து கொண்டுள்ளார். இதில் அனுஷ்கா ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை கூடி காணப்படுகிறார். ஆனால் எக்கசக்க எடை போட்டும் அனுஷ்கா... பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.