நடிகை அமலா பால்... வித்தியாசமான இடங்களுக்கு சென்று புகைப்படம் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, செம்ம கியூட்டாக வெளியிட்ட புகைப்படங்கள் அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது.
இப்படி பார்த்து... பார்த்து... கதை தேர்வு செய்து நடித்தாலும், அந்த படங்களில் இவரது கதாபாத்திரம் முதல் கதை வரை நல்ல விமர்சனங்களை பெற்றாலும், ஏனோ பாக்ஸ் ஆபிசில் தோல்வியை தழுவி விடுகிறது.
தற்போது இவர் கை வசம், இரண்டு மலையாள திரைப்படங்களும், தமிழில் ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது. திரைப்படங்கள் நடிப்பது மட்டும் இன்றி, வெப் தொடர்களிலும் அமலா பால் கவனம் செலுத்த துவங்கியுள்ளார்.
அதே போல் செடிகளை பித்து விளையாடியது போன்ற வித்தியாசமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் ஷூட்டிங் இல்லாததால் இப்படி இறங்கி விட்டீர்களே என கியூட்டாக கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் தற்போது அமலா பால் வெளியிட்டுள்ள இந்த அழகிய புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியிலும், நெட்டிசன்கள் மத்தியிலும் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.