பிக்பாஸ் 3-வது சீசனில் நிகழ்ச்சியில் பரபரப்பாக பேசப்பட்ட போட்டியாளர் என்றால் அது லாஸ்லியா தான், இவருக்கும் கவினுக்கும் இடையே பற்றி கொண்ட காதல் தீ பற்றி தற்போது வரை இருவருமே வாய் திறக்காமல் உள்ளனர்.
எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து, பட வாய்ப்புகளை தேடி வரும் லாஸ்லியா... கவர்ச்சி ரூட்டுக்கு திரும்பியுள்ளது இவரது ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லாஸ்லியா நடிப்பில் முதலில் வெளியான பிரென்ட் ஷிப் திரைப்படம் படு தோல்வியை சந்தித்தாலும், இந்த படத்தை அடுத்து வெளியான கூகுள் குட்டப்பன் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் லாஸ்லியா... தற்போதைய நடிகைகள் எப்படி கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்களோ அதே ரூட்டை தான் ஃபாலோ செய்கிறார்.
தற்போது... கிழிந்து தொங்கும் குட்டை பாவாடை அணிந்து, கையில் சன் பிளவர் பூவை வைத்தபடி இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.