தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அமலா பால் எப்போதுமே சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதவர். சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவா செயல்படும் இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
நீல நிற ஷார்ட் அணிந்து, கொட்டும் மழையில்... நனைந்தபடி இயற்கையை ரசிக்கிறார் அமலா பால். அழகிற்காக வைக்கப்படும் வாழை மரத்தில் இருக்கும் கலர் ஃபுல் பூவை பார்த்ததுமே காதலில் விழுந்து விட்டதாக முத்தமழை பொழிந்துள்ளார்.
தற்போது தன்னுடைய வெகேஷனை என்ஜோய் செய்து வரும் அமலா பாலின் கைவசம் தற்போது சில மலையாள படங்கள் மட்டுமே உள்ளது. தமிழில் இவர் நடித்து முடித்துள்ள 'அதோ அந்த பறவை போல' திரைப்படமும் இன்னும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.