நடிகர் கமல்ஹாசனும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் சமகாலத்தில் அறிமுகமான நடிகராக இருந்தாலும், இவர்கள் இருவரும் எந்தவித பொறாமையும் இன்றி இன்றளவும் நண்பர்களாக பழகி வருகின்றனர். ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த புதிதில் அவருக்கு குடிப் பழக்கம், சிகரெட் பழக்கம் போன்றவை இருந்தன. பின்னர் நாளடைவில் ஆன்மீகத்திற்குள் அவர் சென்றது அந்த பழக்கங்களை எல்லாம் நிறுத்திவிட்டார். அவர் 70 வயதைக் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வருவதற்கு அந்த பழக்கங்களையெல்லாம் கைவிட்டதும் ஒரு முக்கிய காரணம்.