பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான படம் 'வாரிசு'. பொங்கல் விருந்தாக வெளியான இந்த படம், ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பெற்றது. அம்மா - மகன், அண்ணன் - தம்பி, சித்தப்பா - அண்ணன் மகள் என்று குடும்ப உறவுகளை கொண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
24
வாரிசு - ஸ்ரீகாந்த் சம்பளம்
வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், சங்கீதா, சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு, கணேஷ் வெங்கட்ராமன், எஸ் ஜே சூர்யா, பிரபு, ஜெயசுதா என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர்.
34
வாரிசு - ஸ்ரீகாந்த் சம்பளம்
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கில் வாரசூடு என்ற பெயரில் இந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.
44
வாரிசு - ஸ்ரீகாந்த் சம்பளம்
இதற்கு முன்னதாக வெளி வந்த விஜய்யின் பிகில் படம் குவித்த வசூல் சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. இந்த நிலையில், இந்தப் படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்த ஸ்ரீகாந்திற்கு ரூ.60 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதே போன்று விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதாவிற்கு ரூ.30 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. வாரிசு படம் வெளியாகி ஒரு மாதத்திற்கும் மேல் ஆன நிலையில் கடந்த 22 ஆம் தேதி இந்தப் படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.