‘வாத்தி’யிடம் சரண்டர் ஆன ‘வாரிசு’... பாக்ஸ் ஆபிஸில் விஜய் படத்தை பந்தாடிய தனுஷ்

தெலுங்கில் விஜய்யின் வாரிசு படத்தை விட தனுஷின் வாத்தி படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. 

Dhanush vaathi movie beat thalapathy vijay varisu movie box office collection in telugu states

தமிழ் நடிகர்கள் தெலுங்கு படங்களில் நடிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்தாண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிய இப்படம் இரண்டு மொழிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு அடுத்தபடியாக தெலுங்குக்கு சென்றவர்கள் என்றால் அது விஜய்யும், தனுஷும் தான். விஜய்யின் வாரிசு படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருந்தார். அதேபோல் தனுஷின் வாத்தி படத்தையும் தெலுங்கு டைரக்டரான வெங்கி அட்லூரி தான் இயக்கினார்.

Dhanush vaathi movie beat thalapathy vijay varisu movie box office collection in telugu states

இதில் வாரிசு திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வாரிசு என்கிற பெயரிலும், தெலுங்கில் வாரசுடு என்கிற பெயரிலும் ரிலீஸ் ஆனது. தெலுங்கில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு தயாரித்திருந்த இப்படம் தமிழைப் போல் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டது. வாரசுடு திரைப்படம் தெலுங்கில் மட்டும் ரூ.25.5 கோடி வசூலித்து சாதனை படைத்து இருந்தது. இந்த சாதனையை தற்போது தனுஷின் வாத்தி திரைப்படம் முறியடித்து உள்ளது.

இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் லியோ பட பிசினஸ்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.400 கோடி வசூலை தட்டிதூக்கி சாதனை


தனுஷின் வாத்தி திரைப்படம் தெலுங்கில் சார் என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது. சித்தாரா நிறுவனம் சார்பில் நாக வம்சி தயாரித்திருந்த இப்படத்திற்கு தமிழ்நாட்டை விட தெலுங்கு மாநிலங்களில் அமோக வரவேற்பை பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தி வருகிறது. அதன்படி சார் திரைப்படம் தெலுங்கில் மட்டும் ரூ.28.5 கோடி வசூலித்து விஜய்யின் வாரிசு பட வசூல் சாதனையை பத்தே நாளில் முறியடித்து பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது.

தனுஷின் வாத்தி திரைப்பட கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், இப்படம் தொடர்ந்து வசூலை வாரிக் குவித்து வருகிறது. இப்படம் விரைவில் உலகளவில் ரூ.100 கோடி வசூலை எட்டிவிடும் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கில் விஜய்யை விட தனுஷ் படத்திற்கு கிடைத்துள்ள அமோக வரவேற்பு கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், இதையடுத்து மீண்டும் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... 50 ஆவது பிறந்தநாளை 'லியோ' படக்குழுவினருடன் கொண்டாடிய கெளதம் மேனன்..! வைரலாகும் புகைப்படம்..!

Latest Videos

click me!