கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன், பிப்ரவரி 25 ஆம் தேதி தன்னுடைய 50 ஆவது பிறந்தநாளை மிக சிறப்பாக கொண்டாடினார். தற்போது தளபதி விஜய்யுடன் இவர் நடித்து வரும், 'லியோ' படத்திற்காக காஷ்மீரில் உள்ள நிலையில், படக்குழுவினர் இவருக்கு கேக் வெட்டி பிரமாண்டமாக இந்த பிறந்தநாளை செலபிரேட் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது தளபதி ரசிகர்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து தமிழில் இவர் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, எங்கேயும் எப்போதும், நீ தானே என் பொன் வசந்தம், போன்ற படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, இவரின் படங்களுக்கான தனி ரசிகர்கள் வட்டாரத்தையும் உருவாக்கி கொடுத்தது.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில், இவருடைய பிறந்தநாளை படக்குழுவினர் மிக பிரம்மாண்டமாக கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாக தளபதியின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.