ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்ல, 7 பேர இந்தியன் தாத்தா எப்படித்தான் சமாளிப்பாரோ?

Published : Feb 27, 2023, 11:02 AM IST

இந்தியன் 2 படத்தில் கமல் ஹாசனுக்கு ஒன்றல்ல, இரண்டல்ல 7 பேர் வில்லன்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

PREV
16
ஒன்னு ரெண்டுன்னா பரவாயில்ல, 7 பேர இந்தியன் தாத்தா எப்படித்தான் சமாளிப்பாரோ?
இந்தியன் 2

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திரமாக விளங்கும் கமல் ஹாசன் அரசியலிலும், சினிமாவில் மாஸ் காட்டி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான விக்ரம் ஏகபோக வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தற்போது பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். ஷங்கர் - கமல் காம்பினேஷனில் வெளியான இந்தியன் படத்தையும் அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்திருக்க முடியாது. இந்தியன் தாத்தாவாக ஊழலுக்கு எதிராக ஒரு கலக்கு கலக்கியிருப்பார் கமல் ஹாசன். நிஜ வாழ்க்கையிலும் இப்படியொரு தாத்தா கண்டிப்பாக இந்திய நாட்டிற்கு தேவை என்று எண்ண தோன்றும் ஒரு கதாபாத்திரம்.

26
இந்தியன் 2

தற்போது மீண்டும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஷங்கர் - கமல் காம்போவில் இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2019-ம் ஆண்டே தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் தடைபட்டு, மீண்டும் 2020-ம் ஆண்டு முழுவீச்சில் படப்பிடிப்பை தொடங்கி நடத்தி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், 3 பேர் உயிரிழந்தனர். அதன் பிறகு 2 ஆண்டுகளாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.

36
இந்தியன் 2

சென்னை, ஹைதராபாத், திருப்பதி என்று பல இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனமும், லைகா நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன.

46
இந்தியன் 2

இந்தப் படத்தில் கமல் ஹாசனுன் இணைந்து டெல்லி கணேஷ், காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, சித்தார்த், பாபி சிம்ஹா, மனோபாலா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், ஜார்ஜ் மரியன், வெண்ணிலா கிஷோர், தீபா சங்கர், வினோத் சாகர், ஜெயபிரகாஷ், மாரிமுத்து, சிவாஜி குருவாயூர், குரு சோமசுந்தரம் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

56
இந்தியன் 2

தற்போது சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில், ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் கமல் ஹாசனுக்கு 7 வில்லன்களாம். அதுவும், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், குரு சோமசுந்தரம், மாரிமுத்து, ஜெயபிரகாஷ், சிவாஜி குருவாயூர் ஆகியோர் வில்லன்களாக நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. 

66
இந்தியன் 2

இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் தனுஷ்கோடியில் படமாக்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது. வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories