தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு, துப்பறிவாளன் என பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கியுள்ள மிஷ்கின், தற்போது கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதிலும் குறிப்பாக இவருக்கு வில்லன் வேடங்கள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் மிஷ்கின் முதன்முதலில் வில்லனாக நடிக்க கமிட் ஆன படம் மாவீரன். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்து வருகிறார்.