சூடுபிடிக்கும் லியோ பட பிசினஸ்... இன்னும் ஷூட்டிங்கே முடியல அதற்குள் ரூ.400 கோடி வசூலை தட்டிதூக்கி சாதனை

லியோ படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. 

Lokesh kanagaraj Leo movie with Thalapathy vijay earns 400 crores in Pre release business

வாரிசு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார். இதில் ஹீரோயினாக திரிஷா நடிக்க வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குனர்கள் மிஷ்கின், கவுதம் மேனன் மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர நடிகை பிரியா ஆனந்த், நடிகர்கள் மன்சூர் அலிகான், சாண்டி, மேத்யூ தாமஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது.

லியோ படத்தின் ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இதற்காக தனி விமானம் மூலம் கடந்த மாதம் காஷ்மீர் சென்ற படக்குழு, அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடுமையாக உழைத்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பை நான்கே மாதத்தில் முடிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ் கனகராஜ், அதற்கு ஏற்றார்போல் செம்ம ஸ்பீடாக ஸ்கெட்ச் போட்டு ஷூட்டிங்கை நடத்தி வருகிறார். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படியுங்கள்... மஞ்சள் காமாலையால் இளம் இயக்குனர் பரிதாப பலி... முதல் படம் ரிலீசாகும் முன்பே உயிரிழந்த சோகம்


லியோ படத்தின் ஷூட்டிங் ஒரு பக்கம் படு ஜோராக நடைபெற்று வரும் நிலையில், மறுபுறம் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. சமீபத்திய தகவல்படி இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. அந்நிறுவனம் ரூ.120 கோடிக்கு இதனை வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.70 கோடிக்கு வாங்கி உள்ளதாம். அதேபோல் சோனி மியூசிக் நிறுவனம் லியோ படத்தின் இசை உரிமையை ரூ.18 கோடிக்கு வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இப்படத்தின் இந்தி டப்பிங் உரிமையும் ரூ.30 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளதாம். திரையரங்க உரிமை அல்லாது மற்றவை மூலம் மட்டும் லியோ திரைப்படம் ரூ.240 கோடி வசூலை வாரிக் குவித்து உள்ளது. மறுபுறம் இப்படத்தின் திரையரங்க உரிமை மட்டும் உலகளவில் ரூ.175 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை ரூ.75 கோடிக்கும், வெளிநாட்டு உரிமை ரூ.50 கோடிக்கும், கேரளா, ஆந்திரா, தெலங்கானா உரிமைகள் ரூ.35 கோடிக்கு, இதர மாநிலங்களில் ரூ.15 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்களாம். இதன்மூலம் லியோ திரைப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.400 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... ஷூட்டிங்கில் விபத்து... ஸ்டண்ட் சீனில் டூப் போடாமல் நடித்த நடிகர் விஜய் விஷ்வாவுக்கு கை முறிந்ததால் பரபரப்பு

Latest Videos

click me!