Abhinaya: 15 வருட காதலனை கரம் பிடித்தார் நடிகை அபிநயா; வைரலாகும் புகைப்படங்கள்!

Published : Apr 17, 2025, 11:32 AM ISTUpdated : Apr 17, 2025, 11:45 AM IST

சென்னையைச் சேர்ந்த நடிகை அபிநயா ஆனந்த், கடந்த 15 வருடமாக காதலித்து வந்த தன்னுடைய நண்பரும் தொழிலதிபருமான வகிசனா கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.  

PREV
16
Abhinaya: 15 வருட காதலனை கரம் பிடித்தார் நடிகை அபிநயா; வைரலாகும் புகைப்படங்கள்!

தெலுங்கு படத்தில் அறிமுகம்:

மாடலாக இருந்து, பின்னர் நடிகையாக மாறியவர் தான் அபிநயா ஆனந்த். 2008 ஆம் ஆண்டு தெலுங்கில் இயக்குனர் பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ரவி தேஜா மற்றும் சியா கௌதம் நடித்த Neninthe என்கிற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் அறிமுகமான அபிநயா, இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். இவருடைய அழகும் - நடிப்பும் ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து, நாகார்ஜுனாவின் கிங் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

26
Nadodigal Actress Abhinaya

'நாடோடிகள்' பட நடிகை:

தெலுங்கில் அடுத்தடுத்த படங்களின் வாய்ப்பை கைப்பற்றி நடித்து வந்த அபிநயாவுக்கு, 2009 ஆம் ஆண்டு 'நாடோடிகள்' திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்கும் வாய்ப்பை வழங்கியவர் இயக்குனர் சமுத்திரக்கனி. இந்த படத்தில் சசிகுமாருக்கு தங்கையாக பவித்ரா நடராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக, சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருதை வென்றார். மேலும் பல்வேறு விருதுகளுக்காகவும் நாமினேட் செய்யப்பட்டார்.

ஜோடி பொருத்தம் சூப்பரா இருக்கே! ஒரு வழியாக காதலன் போட்டோவை வெளியிட்ட அபிநயா

36
Abinaya Tamil Movies:

அபிநயா நடித்த படங்கள்:

திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்த அபிநயாவுக்கு, தமிழில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அதன்படி இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஏழாம் அறிவு, வீரம், தனி ஒருவன், தாக்க தாக்க, அடிடா மேளம், குற்றம் 23, நிசப்தம், போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

46
Mookuthi Amman 2

மூக்குத்தி அம்மன் 2:

தற்போது நடிகை நயன்தாரா, இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்துவரும் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அதேபோல் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான 'பணி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி நடிகையாக இருந்தாலும், இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, என ஐந்து மொழிகளில் நடித்த ஒரே நடிகை என்கிற பெருமைக்குரியவர்.

விஷால் உடன் காதல் சர்ச்சையில் சிக்கியவர்; நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது!

56
Abinaya Confirm Love Relationship:

15 வருட ரிலேஷன்ஷிப்:

இவரைப் பற்றிய காதல் கிசுகிசு அடிக்கடி சமூக வலைதளத்தில் வெளியாகி வந்த நிலையில், கடந்த ஆண்டு தான் ஏற்கனவே 15 வருடமாக ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் தன்னை யாருடனும் ஒப்பிட்டு பேச வேண்டாம் என தெரிவித்தார். 15 years of love: Abhinaya gets married! Fans congratulate her தன்னுடைய பள்ளி நண்பரான வகிசனா கார்த்திக் என்பவருடன் தான் அபிநயா கடந்த ரிலேஷன்ஷிப் இருந்து வந்ததை நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்தார்.

66
Abinaya and Vegesana Karthik wedding:

ஹைதராபாத்தில் நடந்து முடிந்த திருமணம்:

இவருடைய காதலர் ஐதராபாத்தைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர் ஆவார். இவருக்கு சொந்தமாக இறால் பண்ணை, ஹோட்டல் என பல நிறுவனங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த மார்ச் 9ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்,  நேற்று ஹைதராபாத்தில் அபிநயாவுக்கும் இவருடைய காதலருக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. அபிநயாவின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

15 வருஷமா அவர் கூட ரிலேஷன் ஷிப்பில் இருக்கேன்! காதலை ஓப்பனாக கூறிய அபிநயா!

Read more Photos on
click me!

Recommended Stories