சுந்தர் சி-யின் அடுத்த பட ஹீரோ இவரா? கோலிவுட்டில் உருவாகும் புது கூட்டணி!

Published : Apr 17, 2025, 09:43 AM IST

தமிழ் சினிமாவில் பிசியான இயக்குனராக வலம் வரும் சுந்தர் சி, அடுத்ததாக பிரபல நடிகருடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார். அதைப் பற்றி பார்க்கலாம்.

PREV
14
சுந்தர் சி-யின் அடுத்த பட ஹீரோ இவரா? கோலிவுட்டில் உருவாகும் புது கூட்டணி!

Karthi Joins Hands with Sundar C for a New Film – Official Announcement! காமெடி படங்கள் என்றாலே நம் நினைவுக்கு வருவது சுந்தர் சி படங்கள் தான். அவர் இயக்கும் படங்களில் காமெடிக்கு பஞ்சம் இருக்காது. குறிப்பாக அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா, வின்னர், கலகலப்பு போன்ற படங்கள் அதன் காமெடிக்காகவே பிளாக்பஸ்டர் ஹிட் ஆகின. கடந்த சில ஆண்டுகளாக காமெடி படங்களைக் காட்டிலும் பேய் படங்களில் அதிக கவனம் செலுத்தி வந்தார் சுந்தர் சி. அதுவும் அவருக்கு கிளிக் ஆகியது.

24
Gangers movie

சுந்தர் சி-யின் அடுத்த படம்

இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வந்த மதகஜராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.50 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் ஹிட் அடித்தது. இந்த நிலையில், அவர் இயக்கிய மற்றொரு திரைப்படமான கேங்கர்ஸ் தற்போது கோடை விருந்தாக திரைக்கு வருகிறது. இப்படத்தில் வடிவேலு உடன் இணைந்து நடித்துள்ளார் சுந்தர் சி. இப்படம் வருகிற ஏப்ரல் 24ந் தேதி திரைக்கு வர உள்ளது. இதில் கேத்ரின் தெரசா, வாணி போஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... பல கெட்டப்புகளில் சுந்தர்சியுடன் காமெடியில் ரணகளம் பண்ணும் வடிவேலு! 'கேங்கர்ஸ்' ட்ரைலர்!

34
Mookuthi Amman 2

சுந்தர் சி செம பிசி

கோலிவுட்டில் தற்போது பிசியான இயக்குனராகவும் சுந்தர் சி வலம் வருகிறார். இவர் இயக்கிய கேங்கர்ஸ் பட ரிலீஸ் வேலைகள் ஒருபுறம் பிசியாக நடக்க, மறுபுறம் அவர் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. இதில் ரெஜினா, சுந்தர் சி, இனியா, துனியா விஜய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

44
Karthi, Sundar C

சுந்தர் சி - கார்த்தி காம்போ

இந்நிலையில், சுந்தர் சி மற்றுமொரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அந்த படத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளாராம். இவர்கள் இருவரும் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளனர். தற்போது வா வாத்தியார், கைதி 2, சர்தார் 2 என பிசியான லைன் அப் வைத்திருக்கும் கார்த்தி, இயக்குனர் சுந்தர் சி உடன் இணைய உள்ள தகவல் கோலிவுட்டில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இப்படம் காமெடி கலந்த ஒரு கமர்ஷியல் விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... 25வது திருமண நாள் : மனைவி குஷ்புடன் சென்று முருகனுக்கு மொட்டையடித்த சுந்தர் சி!

Read more Photos on
click me!

Recommended Stories