நரைத்த முடி; பிரியங்காவின் 2வது கணவர் வயதானவரா? இருவரின் வயசு வித்தியாசம் என்ன?

Published : Apr 17, 2025, 08:53 AM ISTUpdated : Apr 17, 2025, 12:24 PM IST

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே 2வதாக திருமணம் செய்துகொண்ட வசி என்பவரின் வயது குறித்த விவரங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

PREV
15
நரைத்த முடி; பிரியங்காவின் 2வது கணவர் வயதானவரா? இருவரின் வயசு வித்தியாசம் என்ன?

Priyanka Deshpande and DJ Vasi sachi Age Difference : விஜய் டிவியில் தொகுப்பாளினியாக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா, ஸ்டார்ட் மியூசிக் என பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். இதுதவிர பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார் பிரியங்கா, அதில் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பிரியங்கா நூலிழையில் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். பிக் பாஸ் டைட்டில் மிஸ் ஆனாலும், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5 வது சீசனில் வெற்றிபெற்று டைட்டிலை தட்டிச் சென்றார் பிரியங்கா.

25
Priyanka Deshpande Marriage Photos

பிரியங்கா தேஷ்பாண்டே விவாகரத்து

பிரியங்கா தேஷ்பாண்டேவுக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பணியாற்றியபோது, அதில் தன்னுடன் பணியாற்றிய பிரவீன் என்பவரை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடியின் திருமண வாழ்க்கை ஆறே ஆண்டுகளில் நிறைவடைந்தது. கடந்த 2022-ம் ஆண்டு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். ஆனால் இதுபற்றி வெளியில் அறிவிக்காமல் சீக்ரெட்டாக வைத்திருந்தார் பிரியங்கா.

35
Priyanka Deshpande Second Marriage

பிரியங்கா தேஷ்பாண்டே 2வது திருமணம்

இந்த நிலையில், விஜே பிரியங்கா தேஷ்பாண்டே நேற்று திடீரென இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவர் டிஜே வசி என்பவரை மறுமணம் செய்திருக்கிறார். எந்தவித அறிவிப்பும் இன்றி சர்ப்ரைஸாக பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய இரண்டாவது திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். இதில் பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி ஆகியோரும் கலந்துகொண்டனர். பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது திருமணம் தான் தற்போது சோசியல் மீடியாவில் ஹாட் டாப்பிக் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?

45
Priyanka Deshpande Second Marriage With DJ vasi sachi

யார் அந்த டிஜே வசி சச்சி?

பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது திருமணம் செய்த டிஜே வசி யார் என்பது தான் இணையத்தில் பலரும் வலைவீசி தேடி வரும் கேள்வி ஆகும். வசி டிஜேவாக பணியாற்றி வருகிறார். பல கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பப்புகளில் டிஜேவாக பணியாற்றி உள்ள இவர், ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி ஒன்றையும் சொந்தமாக நடத்தி வருகிறார். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் தான் பிரியங்காவுக்கும் வசிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது. அதன் பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

55
Priyanka Deshpande Husband DJ Vasi Sachi Age

பிரியங்கா தேஷ்பாண்டே - டிஜே வசி வயது வித்தியாசம்

பிரியங்கா தேஷ்பாண்டேவின் இரண்டாவது கணவர் வசி, நரைத்த முடியுடன் வயதானவர் போன்ற தோற்றத்தில் இருந்ததால், அவரின் வயது என்ன என்பதை தெரிந்துகொள்ளவும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிஜே வசிக்கு தற்போது 42 வயது ஆகிறது. அவரைவிட பிரியங்கா தேஷ்பாண்டே 10 வயது இளையவர். அவருக்கு தற்போது 32 வயது தான் ஆகிறது. பிரியங்கா தேஷ்பாண்டே தன்னைவிட 10 வயது மூத்தவரை திருமணம் செய்துகொண்டுள்ள தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்... பக்கா பிளானோடு நடந்த திருமணம்; பிரியங்கா தேஷ்பாண்டேயின் 2ஆவது திருமணத்தில் பிக்பாஸ் பிரபலங்கள்!

Read more Photos on
click me!

Recommended Stories