
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்
Priyanka Deshpande DJ Vasi Sachi 2nd Marriage : கர்நாடகா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே. என்னதான் பிரியங்கா தேஷ்பாண்டே கர்நாடகாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அவரை வரவேற்றது தமிழ்நாடு. இதற்கான அவர் கர்நாடகாவிலிருந்து சென்னைக்கு வந்தார். எதிராஜ் மகளிர் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்துள்ளார். தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தன்னை அறிமுகம் செய்து கொண்ட பிரியங்கா தேஷ்பாண்டே இன்று அதிகம் சம்பளம் வாங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே
சன் டிவி, ஜீ தமிழ், சுட்டி டிவி, சன் மியூசிக், ஸ்டார் விஜய் என்று பல டிவி சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பிரியங்கா தேஷ்பாண்டே பணியாற்றியிருக்கிறார். விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான பிரியங்கா தேஷ்பாண்டே பல நிகழ்ச்சிகளில் சேனலை கிண்டலடித்திருக்கிறார். அந்தளவிற்கு சேனலுடன் ஒன்றி இருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர்
பிரியங்கா தேஷ்பாண்டே நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமின்றி அவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. சில நேரங்களில் சசிகுமார் மாதிரி சிரித்து மிமிக்ரியும் செய்வார். வெயிலோடு விளையாடு என்ற பாடலை மிகவும் கச்சிதமாக பாடக் கூடியவர். அந்தப் பாடல் மட்டுமின்றி இன்னும் பல பாடல்களை பாடி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தக் கூடியவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் தான் அவர் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பெண் தொகுப்பாளருக்கான விருது
2016 ஆம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான ஆனந்த விகடன் சினிமா விருது வென்றுள்ளார். இதே போன்று 2017 ஆம் ஆண்டு சிறந்த பெண் தொகுப்பாளினிக்கான விஜய் டெலிவிஷன் விருது வென்றுள்ளார். தொடர்ந்து 3ஆவது முறையாக சிறந்த தொகுப்பாளினிக்கான விருதும் பிரியங்கா தேஷ்பாண்டேவிற்கு வழங்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டு கலாட்டா நட்சத்திரா தொலைக்காட்சி-திரைப்பட விருதுகளில் பிரியங்கா 3ஆவது முறையாக சிறந்த பெண் தொகுப்பாளினி விருதை வென்றார். இப்படி தொடர்ந்து 3 முறை சிறந்த தொகுப்பாளினிக்கான விருது பெறுவது இவராகத்தான் இருக்கும். பிரியங்கா தேஷ்பாண்டே யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி அதன் மூலமாகவும் வருமானம் ஈட்டி வருகிறார்.
சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திர விருது
யூடியூப் சேனல் வெற்றிக்கு பிறகு 2021 ஆம் ஆண்டில் பிளாக்ஷீப் டிஜிட்டல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த பொழுதுபோக்கு நட்சத்திர விருதையும் பெற்றார். இவர், தனது யூடியூப் சேனலில் 1.38 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் கொண்டுள்ளார். இப்படி பல விருதுகளை வென்றுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே கிங்ஸ் ஆப் காமெடி ஜூனியர்ஸ், சூரிய வணக்கம், அழகிய பெண்ணே, ஜோடி நம்பர் ஒன், கிளிம்ப்ஸ், சூப்பர் சிங், தி வால், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, சூப்பர் சிங்கர் ஜூனியர் என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது ஊ சொல்றியா ஊ ஊ சொல்றியா என்ற நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.
குறும்படங்களில் நடித்த பிரியங்கா தேஷ்பாண்டே
ராணி ஆட்டம், உன்னோடு வாழ்ந்தால் வரமல்லவா போன்ற குறும்படங்களிலும் பிரியங்கா தேஷ்பாண்டே நடித்துள்ளார். புகழ் உடன் இணைந்து சோ சோக்கு என்ற மியூசிக் வீடியோவிலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் தான் பிரியங்கா தேஷ்பாண்டே கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிரியங்கா தேஷ்பாண்டே விவாகரத்து
பிரவீன் குமார் விஜய் டிவியில் பணியாற்றி வந்துள்ளார். இருவருமே விஜய் டிவியில் பணியாற்றிய போது இருவருக்கும் இடையில் நட்பு உருவாகியிருக்கிறது. காலப்போக்கில் அந்த நட்பு காதலாக மாறவே 2016ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆனால், அவர்களது திருமண வாழ்க்கை எதிர்பார்த்தபடி சந்தோஷமாக செல்லவில்லை. இதன் காரணமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் அம்மா மற்றும் சகோதரன் உடன் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்கா தேஷ்பாண்டே தற்போது 2ஆவது திருமணம் செய்து கொண்டார். தனக்கு குழந்தைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். தனது கணவர் தன்னை தாங்கு தாங்கு என்று தாங்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவர் தான் தனக்கு கணவராக வர வேண்டும் என்று டிவி நிகழ்ச்சிகளில் பிரியங்கா தேஷ்பாண்டே பேசியிருந்தார். அதுமட்டுமின்றி இப்போதைக்கு தனது சகோதரரின் குழந்தை தான் தனக்கும், குடும்பத்திற்கும் சந்தோஷம் என்று கூறியிருந்தார்.
பிரியங்கா தேஷ்பாண்டே 2அவது திருமணம்
இந்த நிலையில் தான் இப்போது பிரியங்கா தேஷ்பாண்டே 2அவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகவே அவர் 2ஆவது திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. இந்த திருமணத்தில் பிரியங்கா தேஷ்பாண்டேயின் அம்மாவும் இருக்கிறார்.
பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் – பிக்பாஸ் பிரபலங்கள்
பிக்பாஸ் பிரபலங்களான அமீர், பாவனி ரெட்டி, நிரூப் நந்தகுமார் ஆகியோர் பலரும் பிரியங்கா தேஷ்பாண்டேயின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இது குறித்து பிரியங்கா தேஷ்பாண்டே வெளிப்படையாக அறிவிக்கவே இல்லை. ஒரு புறம் அவரது ரசிகர்களுக்கு இது வருத்தமாக இருந்தாலும், அவர் சந்தோஷமாக திருமணம் செய்து கொண்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பிரியங்கா தேஷ்பாண்டே காதல் திருமணமா?
இந்த திருமண நிகழ்ச்சியில் பிரியங்கா தேஷ்பாண்டேவை பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமாக, உற்சாகமாக இருக்கிறார். அப்படி என்றால், இந்த திருமணம் காதல் திருமணமாக இருக்குமோ என்று எண்ணம் தோன்றுகிறது. அதுமட்டுமின்றி பிரியங்கா தேஷ்பாண்டேவின் கழுத்தில் தாலி கட்டிய அடுத்த நிமிடம் அவருக்கு மாப்பிள்ளை டிஜே வசி கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.
ஆகையால், இந்த திருமணம் இருவருக்கும் காதல் திருமணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியில்லை என்றால் இருவரும் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்களாக கூட இருக்கலாம். மேலும், மாப்பிள்ளை வசி டிஜே வாக பணியாற்றி வருகிறாராம். அவரை பார்க்கும் போது சற்று வயதானவர் போன்று தெரிகிறது. உண்மையில் அவரது வயது பற்றி எந்த தகவலும் இல்லை. இந்து முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றிருக்கிறது. மேலும், அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சடங்கும் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
பிரியங்கா தேஷ்பாண்டேயின் 2ஆவது திருமண நிகழ்ச்சியில் பிக்பாஸ் பிரபலங்களான நிரூப் நந்தகுமார், அமீர், பாவனி ரெட்டி ஆகியோர் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்படியென்றால் இந்த திருமணம் முன் கூட்டியே திட்டமிடப்பட்டு ஏற்பாடுகளுடன் நடந்துள்ளதாக தெரிகிறது.
என்றாலும் கூட இன்ஸ்டா பக்கத்தில் காதலுக்கு கண்ணு இல்ல என்று கேள்வி பட்டிருக்கிறேன். இப்போது தான் பார்க்கிறேன், பிரியங்கா சிஸ்டர் உங்க ஹஸ்பண்டுக்கு ஏஜ் என்ன, 60ஆவது கல்யாணமா, எல்லாமே காசு தான், யாரு இந்த அங்கிள், நம்பவே முடியவில்லை என்று பலரும் பலவிதமாக தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இன்னும் சிலர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். பிரியங்கா சோப்ரா ரசிகர்களுக்கு இந்த திருமணம் இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.