Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?

Published : Apr 16, 2025, 06:54 PM ISTUpdated : Apr 17, 2025, 12:26 PM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவருக்கு தற்போது திடீர் என திருமணம் நடந்து முடிந்துள்ளது.  

PREV
15
Priyanka Deshpande: அவசர அவசரமாக விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! இவர் தான் மாப்பிள்ளையா?

தொகுப்பாளினி பிரியங்கா:

விஜய் டிவி தொலைக்காட்சியில், டிடிக்கு அடுத்தபடியாக அதிகமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட பெண் தொகுப்பாளினி என்றால் அது பிரியங்கா தேஷ்பாண்டே தான். இவருக்கு ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில்,  தற்போது வசி என்பவருடன் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகிறது.

25
Priyanka Television carrier

எத்திராஜ் கல்லூரியில் படித்த பிரியங்கா:

பிரியங்கா தேஷ்பாண்டே கர்நாடகாவை சேர்ந்தவர் என்றாலும், இவர் வளர்ந்தது படித்தது எல்லாம் தமிழகத்தில் தான்.  சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் படித்த பிரியங்கா, பேச்சு திறமை மிக்கவர் என்பதால், தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக மாற வாய்ப்பு தேடினார். ஏற்கனவே சில தொலைக்காட்சிகளில் இவர் தொகுப்பாளராக பணியாற்றி வந்தாலும், விஜய் டிவியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் இவரின் காதலர் பிரவீன் என கூறப்படுகிறது.

Priyanka Deshpande: கணவரை பிரிந்தார் பிரியங்கா! விரைவில் இரண்டாவது திருமணம்? அவரின் அம்மாவே சொன்ன விஷயம்!

35
Vijay tv Anchor

விஜய் டிவி தொகுப்பாளினி:

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான, சூப்பர் சிங்கர் சீசன்ஸ், ஸ்டார் மியூசிக் சீசன்ஸ், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார். தற்போது விஜய் டிவியில் அதிக சம்பளம் வாங்கும் தொகுப்பாளினியாகவும் இருந்து வரும் பிரியங்கா, தன்னுடைய காதலர் பிரவீனை கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரவீனும் விஜய் டிவியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். 

45
Priyanka Divorce:

2022-ல் நடந்த விவாகரத்து:

திருமணமான ஒரு சில வருடங்களிலேயே பிரியங்கா மற்றும் பிரவீன் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டு பிரிந்தனர். தற்போது விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவது மட்டுமின்றி, youtube சேனல் ஒன்றையும் பிரியங்கா நடத்தி வருகிறார். அதேபோல் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு, முதல் ரன்னரப்பா மாறினார். அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்? என்ன தான் பிரச்சனை.. உண்மையை உடைத்த பயில்வான்!

55
Priyanka 2nd Marriage:

2-ஆவது திருமணம் செய்த பிரியங்கா தேஷ்பாண்டே:

விவாகரத்துக்கு பின்னர், தனக்கு பிடித்த ஒருவரை பார்த்தால் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என கூறிய பிரியங்கா தற்போது வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களின் திருமண வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பிரியங்கா திருமணம் செய்து கொண்டுள்ள நபரின் பெயரை தவிர மற்ற விவரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இரண்டாவது திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள பிரியங்காவும் தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories