இது என்ன த்ரிஷாவுக்கு வந்த சோதனை? பிரியா வாரியர் கிட்ட இருக்கு ஆனால் உங்ககிட்ட இல்லையா?

Published : Apr 16, 2025, 04:24 PM IST

பிரியா பிரகாஷ் வாரியரன் சமீபத்திய பேட்டியில் அஜித் பற்றி பேசிய தகவலை... த்ரிஷாவின் பழைய பேட்டியோடு ஒப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

PREV
15
இது என்ன த்ரிஷாவுக்கு வந்த சோதனை? பிரியா வாரியர் கிட்ட இருக்கு ஆனால் உங்ககிட்ட இல்லையா?

குட் பேட் அக்லி படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம்:

அஜித் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான 'குட் பேட் அக்லி' படம் கடந்த 10 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருது. முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களுக்காக உருவாக்கப்பட்ட படமாக இந்தப் படம் அமைந்துள்ளது. ரசிகர்கள் இந்தப் படத்தை உற்சாகமாக கொண்டாடி வருகின்ற்னர்.

25
Ajiths Good Bad Ulgy collection reports

ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது

'குட் பேட் அக்லி' படம் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில், இதுவரை தமிழகத்தில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது. இதே போன்று உலகம் முழுவதும் ரூ.170 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்திருக்கிறது. இனி வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிரபார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மட்டும் 100 கோடியை அள்ளிய 'குட் பேட் அக்லி'! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

35
Good Bad ugly movie Cast:

குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள நடிகர்கள் 

இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து சிம்ரன், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில், பிரபு, பிரசன்னா, பிரியா பிரகாஷ் வாரியர் என்று மாஸ் நட்சத்திரங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் பிரியா பிரகாஷ் வாரியர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தொகுப்பாளர் அஜித்தின் போன் நம்பர் உங்களிடம் இருக்கிறதா? என கேள்வி எழுபட்ட நிலையில் அவரும் இருக்கிறது என கூறினார். அஜித்தின் வாட்ஸ் ஆப் டிபியாக அவரின் ரேஸிங் புகைப்படம் தான் இருக்கிறது என தெரிவித்தார்.What did fans ask Trisha? 'Good Bad Ugly' update!
 

45
Priya Varrier Got Ajith Number

அஜித் நம்பர் தன்னிடம் இல்லை

இதே போல் த்ரிஷாவிடம் பழைய பேட்டி ஒன்றில் அஜித்தின் நம்பரை என்ன பெயரில் சேவ் செய்து வைத்திருக்கிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு, அஜித் நம்பர் தன்னிடம் இல்லை என்றும், அவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் அவரது மேனேஜரை தான் தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இப்போதாவது த்ரிஷாவிடம், அஜித் நம்பர் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

3 பாடல்களை தொக்கா தூக்கிய ஆதிக்! இழப்பீடு கேட்டு இளையராஜா அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!
 

55
Trisha character in Good Bad Ugly:

பிரியா வாரியரிடம் இருக்கு  உங்களிடம் இல்லையா? 

மேலும் இப்போது வந்த பிரியா வாரியரிடம் இருக்கும் போது?  ஏன் உங்களிடம் இல்லை என்பது போன்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். இதற்க்கு திரிஷா தரப்பில் இருந்து எந்த மாதிரி பதில் வரும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

குட் பேட் அக்லி படத்தில் மிகவும் குறைவான காட்சிகளில் மட்டும் த்ரிஷா நடித்திருந்தாலும், அவரது நடிப்பு மட்டுமின்றி த்ரிஷா மற்றும் அஜித் கெமிஸ்டரி பெரிதும் பேசப்பட்டது. இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் இந்தப் படம் சிறப்பான படமாக அமைந்துவிட்டது. அதோடு, இப்படத்தில் இடம்பெற்றிருந்த பழைய பாடல்களும் ரசிக்கும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories