actor vimal
வெற்றிக்காக போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களில் விமலும் ஒருவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முன்னதாக பல படங்களில் துணை வேடங்களில் தோன்றியிருந்தார் விமல். களவாணி, கலகலப்பு, வாகை சூடு, உள்ளிட்ட ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பல படங்களில் தோன்றியுள்ளார் விமல்.
actor vimal
சமீபகாலமாக பட வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் நடிப்பில் வெளியான விலங்கு என்கிற வெப்தொடர் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையே சமீபத்தில் இவர் மீது தயாரிப்பாளர்கள் பண மோசடி புகார் கொடுத்தது பரபரப்பு ஏற்படுத்தியது. சினிமா தயாரிப்பாளர்களான கோபி 'மன்னர் வகையறா' படத்தை எடுத்த போது தன்னிடம் ஐந்து கோடி ரூபாய் கடனாகவிமல் வாங்கினார்.
மேலும் செய்திகளுக்கு...ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !
அதை திருப்பித் தரவில்லை என புகார் அளித்திருந்தார். அதேபோல மற்றுமொரு தயாரிப்பாளர் சிங்காரவேலனும் போலீசில் பண மோசடி புகார் கொடுத்தார். அதோடு விமல் மன்னிப்பு கேட்கும் ஒரு ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார்.
actor vimal
இது குறித்து விளக்கம் அளித்த விமல் ஆறு மாதத்திற்குள் பணம் தந்து விடுவதாக அவர்கள் மிரட்டி கூற சொன்னதால் தான் கூறியதாக தெரிவித்து சலசலப்பில் ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் இவர் குறித்த புதிய தகவலாக, அமெரிக்க தேசிய வணிக பல்கலைக்கழகம் இவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஜூலை 26 அன்று அமெரிக்க பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், 'விமல் சமர்ப்பித்து உள்ள சாதனைகள் மற்றும் பங்களிப்பை ஆராய்ந்தோம். இது குறித்து மகிழ்ச்சி அடைந்தோம். உங்களின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கவை. உங்கள் விண்ணப்பத்தை கவனமாக மதிப்பாய்வு செய்த பிறகு எங்கள் கல்வி ஆலோசனை குழு உங்களுக்கு டாக்டர் ஆப் ஆர்ட்ஸ் என்ற பட்டத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறது. எனவே எங்கள் பட்டமளிப்பு விழாவில் கௌரவ டாக்டர் பட்டதை பெற உங்களை அன்புடன் அழைக்கிறோம் . என தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு...”புதுசா மாடு வாங்கி இருக்கோம்”… புது கார் வாங்கியதை வித்தியாசமாக சொன்ன பாலாஜி முருகதாஸ்!!