தென்னிந்தியாவின் மிகப்பெரிய சைவ உணவுகளில் ஒன்றாக கருதப்பட்ட சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மித்துக்கொள்ள வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர் மீது ஜீவஜோதி என்பவர் தனது கணவரை கொலை செய்து விட்டதாக கொடுக்கப்பட்ட புகார் சுமார் 18 ஆண்டுகளாக நடைபெற்றது. தோசா கிங் என ;அழைக்கப்பட்ட ராஜகோபால் ஏற்கனவே இரு முறை திருமணமானவர் அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஜீவஜோதி என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்ய ராஜகோபால் முயன்றதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. என்ன ரோலில் தெரியுமா?
அதுவும் அந்த பெண்ணை மூன்றாவது திருமணம் செய்தால் விவிஐபியாக வாழ்நாள் முழுவதும் இருக்கலாம் என ஜோசியர் சொன்னதால் இந்த விபரீத முடிவிற்கு சரவணபவன் உரிமையாளர் வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஜிவாஜோதி இவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்ததோடு பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.