பிரபல திரைப்பட எடிட்டர் கவுதம் ராஜு காலமானார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று அதிகாலை அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 68. கவுதம் ராஜுவின் மரணத்தால் திரையுலக பிரபலங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 1954 ஆம் ஆண்டு பிறந்த கவுதம் ராஜு, 1982ல் 'தேக் கபர் ரக் நபார்' என்கிற ஒடியா மொழி படம் மூலம் எடிட்டராக வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் என பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களுக்கு இவர் எடிட்டராக பணியாற்றினார்.
தமிழில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் விஜய், முதன்முதலாக நாயகனாக நடித்த நாளைய தீர்ப்பு படத்துக்கு எடிட்டராக பணியாற்றியதும் கவுதம் ராஜு தான். குறிப்பாக இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார். ‘கைதி நம்பர் 150’, ‘ஆதி’, ‘கப்பர்சிங்’, ‘கிக்’, ‘கோபாலா கோபாலா’, ‘பத்ரிநாத்’ என இவரின் வெற்றிப்படங்கள் வரிசை நீண்டுகொண்டே செல்லும்.
அந்த அளவுக்கு சக்சஸ்புல்லான எடிட்டராக வலம் வந்துள்ளார் கவுதம் ராஜு. ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'ஆதி' படத்துக்காக இவர் சிறந்த எடிட்டருக்கான தெலுங்கு திரையுலகின் உயரிய விருதான நந்தி விருதையும் பெற்றார். அவரது மரணம் திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.