அதன்படி இப்படத்தில் மாமன்னனாக உதயநிதி நடிக்கவில்லையாம். அது வடிவேலுவின் கதாபாத்திரம் என்றும், அவருக்கு மகனாகத்தான உதயநிதி நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. வடிவேலுவுக்கு எதிரியாக அழகம்பெருமாள் நடித்து வருவதாகவும், அவரின் வாரிசாக பகத் பாசில் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. வித்தியாசமான அரசியல் கதைக்களத்துடன் இப்படத்தை மாரி செல்வராஜ் படமாக்கி வருகிறாராம். இப்படத்தில் கதையின் நாயகனாக வடிவேலு நடிக்கிறார் யாரும் எதிர்பார்க்காத ஒரு விஷயம் தான்.