பாட்டி வயதிலும் பளீச் வெட்கம்... 80 வயது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படத்தை பகிர்ந்த தளபதியின் தந்தை எஸ்.ஏ.சி!!

First Published | Jul 5, 2022, 8:58 PM IST

தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கும் அவரது மனைவி ஷோபாவிற்கும் இன்று திருக்கடையூரில் 80 ஆவது சஷ்டியப்த பூர்த்தி விழா நடந்த நிலையில், அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் எஸ்.ஏ.சி பகிர்ந்துள்ளார்.
 

அண்மையில் தன்னுடைய 80 ஆவது பிறந்தநாளை, மனைவியுடன் மட்டும் கேக் வெட்டி கொண்டாடிய எஸ்.ஏ.சி, தன்னுடைய 80 ஆவது மணிவிழாவையும் மிகவும் எளிமையாக நடத்தியுள்ளார்.
 

குறிப்பிட்ட நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தளபதி விஜய் மற்றும் அவரது மனைவி, பிள்ளைகள் என யாரும் கலந்து கொள்ளவில்லை.
 

Tap to resize

ஏற்கனவே இவரது சஷ்டியப்த பூர்த்தி புகைப்படங்கள் சில வெளியான நிலையில், விஜய் கலந்து கொள்ளாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தது.
 

ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாத விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களுடைய மணி விழா புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, 80 வயது பூர்த்தி... திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில்  சிறப்பு யாகபூஜை செய்து சாமி தரிசனம்  செய்தோம் என பதிவிட்டுள்ளார்.
 

இதில் பாட்டி வயதிலும் விஜய்யின் தாய் ஷோபா அழைகிய வெட்க புன்னகையோடு ஜொலிக்கிறார். இருவரும்  மாலை மாற்றி கொள்ளும் புகைப்படம் மற்றும் யாகம் செய்யும் பபுகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
 

Latest Videos

click me!