Mumtaj
வெறும் 5 நிமிட காட்சியாக இருந்தபோதும் 'செல்லமே' இவரின் நடிப்பில் ஒரு அத்தியாயத்தை கொடுத்துள்ளது. விஷால், ரீமாசென், பரத், விவேக் முக்கிய வேடங்களில் நடித்த வித்யாசமான கதைக்களத்தை கொண்ட இந்த படத்தில் வருமான வரி அலுவலகத்தில் விவேக்குடன் உரையாடலில் ஈடுபட்டிருப்பார் மும்தாஜ்.
Mumtaj
குஷியில் இவரது நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. கவர்ச்சி கொஞ்சும் நடிப்பு மிக பிரபலம். விஜய் , ஜோதிகாவின் 'குஷி' படம் எஸ்.ஜே. சூர்யா உருவாக்கமாகும். 2000 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மும்தாஜ் துணை வேடத்தில் நடித்திருந்தாலும், கட்டிப்புடிடா சாங் இவரை எங்கோ கொண்டு சென்று விட்டது.
மேலும் செய்திகளுக்கு..14வது ஆண்டில் சுப்ரமணியபுரம்..சசிகுமார் வெளியிட்ட சர்ப்ரைஸ்!
Mumtaj
சாக்லெட் இவருக்கான தனி அடையாளத்தை கொடுத்தது. 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் பிரசாந்த், ஜெயா ரே நடித்துள்ளனர். இவர்களுடன் லிவிங்ஸ்டன் , சுஹாசினி , மும்தாஜ் மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோர் வந்திருந்தனர். இதில் மும்தாஜ் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ஹாஸ்டலில் டவுலிடன் மலை, மலை சாங்கிற்கு இவர் போட்ட குத்து யாராலும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத ஒன்றானது.
மேலும் செய்திகளுக்கு.."இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேன்"..கெத்துக்காட்டிய சரண்யா பொன்வண்ணன்!
MUMTAJ
டி ராஜேந்திரன் இயக்கத்தில் மீண்டும் நடித்த மும்தாஜ் 'வீராசாமி' என்னும் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதில் நாயகனுக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்த இவர் டி ஆருடன் போட்ட ரோமன்ஸ் ஆட்டமும் பிரபலம் தான்.