Subramaniapuram
சசிகுமார் தயாரித்து, எழுதி, இயக்கிய சுப்ரமணியபுரம் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியானது.சென்னை 28க்கு பிறகு ஜெய்க்கு நல்வாய்ப்பை கொடுத்த படமென்றால் அது இந்த படம் தான். 1980கள் காலத்திலான கதைக்களத்தை கொண்ட இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
Subramaniapuram
மதுரையை உலுக்கிய இந்த சம்பவத்தை குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மாஸ் காட்டியது படக்குழு. திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. இதில் அறிமுக நடிகர்களாக இருந்த ஜெய் , சுவாதி , கஞ்சா கருப்பு மற்றும் முக்கிய வேடத்தில் சசிகுமாரே நடித்தார்.
Subramaniapuram
படம் வெளியான ஆண்டின் மிகப்பெரிய வணிக வெற்றிகளில் ஒன்றாக அமைந்தது. இப்படம் மலையாளத்தில் அதே பெயரிலும், கன்னடத்தில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தின் 14 வது ஆண்டு விழாவில் உள்ளது..இந்த செய்தியுடன் ஒரு டிவிஸ்டையும் வெளியிட்டார் இயக்குனர்.
Sasikumar
அதாவது ஜூலை 4 மிகவும் முக்கிய நாள் என குறிப்பிட்ட இயக்குனர் சசி, சுப்ரமணியபுரம் வெளியானதுதான் அதற்கு காரணம் என்றும், இந்த படத்திற்கு தற்போது வரை ரசிகர்களின் ஆதரவிற்கும் அவர் நன்றி என குறிப்பிட்டதுடன். விரைவில் தான் இயக்கவுள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.