சரண்யாவும் கேரளத்து பைங்கிளி தான் சரண்யா. ஷீலா கிறிஸ்டினா என்னும் இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் , தெலுங்கு, மலையாள உள்ளிட்ட மொழிகளில் குணசித்திர வேடத்தில் நடித்த்து வருகிறார். பிரபல நாயகர்களுக்கு அம்மாவாக நடிக்கும் இவருக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது.
24
Saranya Ponvannan
கமலின் பிளாக் பாஸ்டர் படமான நாயகன் திரைப்படத்தில் நாயகியாகி மனதை கொள்ளை கொண்டார் சரண்யா. மனசுக்குள் மத்தாப்பு, என் ஜீவன் பாடுது, சிவப்பு தாலி,அஞ்சலி, உலகம் பிறந்தது எனக்காக உள்ளிட்ட பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள இவர், 1996 -க்கு பிறகு சினிமாவிற்கு லீவ் விட்டார்.
1995-ல் நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்துகொண்ட சரண்யா, எட்டு வருட ஓய்வுக்குப் பிறகு , 2003 இல் குணச்சித்திர நடிகையாக மீண்டும் திரும்பினார். சிம்பு நடித்த அலை படத்தில் அவருக்கு அம்மாவாக தனது மறுபிரவேசத்தை துவங்கிய இவர், அஜித், விஜய், சூர்யா, ஜீவா, பரத், சசிகுமார் என முன்னணி நாயகர்களுக்கு அம்மாவாக நடித்து விட்டார்.
இவர் தற்போது கொடுத்துள்ள பேட்டி ஒன்றில் எம்.மகன் படத்தில் நடிக்க மறுத்த சீன் குறித்து பேசியுள்ளார். பரத் -க்கு அம்மாவான அதில் சரண்யா ரோட்டில் அங்க பிரதஷ்ணம் செய்வது போன்ற காட்சி இருக்கும். இந்த சீனில் முதலில் சரண்யா நடிக்க மறுத்துள்ளார். பின்னர் இயக்குனரின் வற்புறுத்தலுக்கு பிறகு நடித்துள்ளார். பின்னர் அந்த சீன் நல்ல வெற்றியை பெற்றது என பூரிப்பாக கூறியுள்ளார் சரண்யா பொன்வண்ணன்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.