தமிழ் தெலுங்கு என ஸ்பான் இந்திய நாயகனான விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் இதற்கிடையே விடுதலை போன்ற படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் வரும் விஜய் சேதுபதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு வில்லனாக நடிக்க உள்ளார் என சமீபத்தில் தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...பணத்துக்கு ஆசைப்பட்டு என் புருஷனை பிரித்துவிட்டார்- நடிகை பவித்ரா லோகேஷ் மீது நரேஷின் 3-வது மனைவி பகீர் புகார்
புதுமண பெண்ணாக உள்ள நயன்தாரா திருமணத்திற்கு முன்னர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவர உள்ள "ஜவான்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக சமீபத்தில் மும்பைக்கு சென்ற நயன்தாராவின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வந்தது. அட்லியின் பாலிவுட் முதல் இயக்கமான இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரல் ஆனது இதில் புதிய தகவலாக இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...