இந்நிலையில், நடிகை பவித்ரா மீது நரேஷ் பாபு மனைவி ரம்யா பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். தனது மாமியாரின் வைர நெக்லஸை தான் பவித்ரா அணிந்திருப்பதாகவும், பணத்துக்கு ஆசைப்பட்டு தான் அவர் நரேஷை தன்னிடம் இருந்து பிரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். ஆனால் நடிகை பவித்ரா லோகேஷ், தானும் நரேஷும் நெருங்கிய நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாகவும், தங்களுக்கு எந்த வித உறவும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.