விஜய் சேதுபதி வருகையால் கோபம்..! புஷ்பா 2 படத்தில் இருந்து விலகினாரா பகத் பாசில்? - படக்குழு விளக்கம்

Published : Jul 05, 2022, 02:11 PM ISTUpdated : Jul 06, 2022, 11:42 AM IST

Pushpa 2 : விஜய் சேதுபதியை முக்கிய வில்லன் ஆக்கியதால் நடிகர் பகத் பாசில் புஷ்பா 2 படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

PREV
14
விஜய் சேதுபதி வருகையால்  கோபம்..! புஷ்பா 2 படத்தில் இருந்து விலகினாரா பகத் பாசில்? - படக்குழு விளக்கம்

தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு இறுதியில் வெளியான படம் புஷ்பா. செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசிலும் நடித்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!

24

பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த புஷ்பா படம், இந்திய அளவில் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் நடிகை சமந்தா ஆடிய ஐட்டம் டான்ஸும் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது. இதுதவிர தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகின.

இதையும் படியுங்கள்... Varisu movie : பிரபல பிரென்ச் படத்தின் காப்பியா வாரிசு..? இணையத்தில் தீயாய் பரவும் ‘தளபதி 66’ பட கதை

34

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகி வருகின்றனர். முதல்பாகத்தை விட இரண்டாம் பாகத்தை மிகவும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டுள்ள படக்குழு, கதையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதன்படி மேலும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தை இணைத்துள்ளார்களாம். அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... ராஜ்ஜியம் இல்லாத இளவரசன்.... பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக வாகைசூட வரும் கார்த்தி - வைரலாகும் மாஸ் லுக்

44

விஜய் சேதுபதியை முக்கிய வில்லன் ஆக்கியதால் நடிகர் பகத் பாசில் இப்படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் படக்குழு தரப்பில் இந்த தகவலை மறுத்துள்ளனர். பகத் பாசிலும் இப்படத்தில் உள்ளதாகவும், அவர் போலீஸ் அதிகாரியாக நடிப்பார் என்றும் தெரிவித்து வருகின்றனர். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories