இந்நிலையில், வாரிசு படத்தின் கதை இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி லார்கோ வின்ச் என்கிற பிரென்ச் படத்தின் கதையும் வாரிசு படத்தின் கதையும் ஒன்றுதான் என கூறப்படுகிறது. லார்கோ வின்ச் படத்தின் கதைப்படி ஒரு பணக்கார தொழிலதிபர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். பின்னர் அந்த தொழிலபருக்கு ரகசிய வாரிசு இருப்பது தெரியவருகிறது. இதையறிந்த வில்லன்கள் அந்த வாரிசை கொல்ல நினைக்கிறார்கள். அவற்றிலிருந்து நாயகன் எப்படி தப்பித்தார் என்பதை திருப்பங்களுடன் தெரிவித்திருக்கும் படம் தான் லார்கோ வின்ச்.
இதையும் படியுங்கள்.... வரவேற்பை பெற்ற '777 சார்லி'... லாபத்தில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி வழங்க முடிவு ...
விஜய்யின் வாரிசு படமும் லார்கோ வின்ச் படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இயக்குனர் வம்சி இதற்கு முன் இயக்கிய தமிழ் படமான தோழாவும், ஒரு பிரெஞ்ச் படத்தை தழுவி தான் எடுக்கப்பட்டிருந்தது. ஆதலால் வாரிசு படமும் அவ்வாறு எடுக்கப்பட்டு வருவதாக சினிமா வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.