விலங்குகள் மீதான அத்துமீறலை மையமாக கொண்டுள்ள 777 சார்லி, செல்லப்பிராணிகள் குறித்த கண்ணோட்டத்தை பிரதிபலிக்கிறது. கன்னட மொழி திரைப்படமான இதை கிரண்ராஜ் கே என்பவர் எழுதி இயக்கியுள்ளார். பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இதில் முக்கிய காதாபாத்திரத்தில் சார்லி என்ற லாப்ரடோர் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி , ராஜ் பி. ஷெட்டி , டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்துள்ளனர் .