இதனிடையே நேற்று இரவு சம்பந்தமே இல்லாத ஒரு நபரின் புகைப்படம் சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்து வந்தனர். பின்னர் இதுகுறித்து விளக்கமளித்த சமந்தாவின் மேனேஜர், தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு தவறுதலாக பதிவாகி உள்ளது என்றும், பின்னர் அது சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் கூறி இருந்தார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.