தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை மீனா. இவரின் கணவர் வித்யாசாகர் அண்மையில் உடல் நல பிரச்சனை காரணமாக உயிரிழந்த, நிலையில் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், ஏன் மருத்துவ அறிக்கை வெளியாகவில்லை என வாயிக்கு வந்ததை பேசி யூடியூபில் வெளியிட்ட பயில்வான் ரங்கநாதனை வெளுத்து வாங்கியுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன்.
நடிகரும், பத்திரிகையாளருமான, பயில்வான் ரங்கநாதன் அவ்வப்போது நடிகர், நடிகைகள், குறித்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் பேசி youtube தளத்தில் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது பேச்சுக்கு திரையுலகை சேர்ந்த பலர் தொடர்ந்து தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருவது ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தயாரிப்பாளர் கே.ராஜன் கமிஷனர் அலுவலகத்தில் இவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து புகார் கொடுத்திருந்தார்.
மேலும் செய்திகள்: Tarun Majumdar: திரையுலகை உலுக்கிய பிரபல இயக்குனரின் மரணம்..! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!
இந்நிலையில் கே.ராஜன் 'தெற்கத்தி வீரன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் சர்ச்சை கருத்துக்களை பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை கடுமையாக பேசியது மட்டும் இன்றி திட்டி தீர்த்துள்ளார். மீனாவின் கணவர் மரணத்திற்கு பின்னர் வீடியோ ஒன்றை வெளியிட்ட பயில்வான் நடிகை மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், மீனா மற்றும் அவரது மகள் நைனிகா திரைப்படத்தில் நடிப்பது வித்யாசாகருக்கு பிடிக்காமல் அவர் மன உளைச்சலில் இருந்தார் என கேள்வி எழுப்பி இருந்தார். மேலும் வித்யாசாகர் மரணம் குறித்து ஏன் மருத்துவமனை அறிக்கை வெளியிடவில்லை என பேசி இருந்தார்.
மேலும் செய்திகள்: பிகினி உடையில் படு ஹாட்.. மொத்த அழகை காட்டி இளசுகளை ஏங்க வைத்த யாஷிகா!! கண்ணை கட்டும் போட்டோஸ்!
இவரது பேச்சுக்கு பலர் தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்து தயாரிப்பாளர் கே ராஜன் பட விழாவில் நேரடியாக கேள்விகளை கேட்டு திட்டி தீர்த்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது, நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், என பல்வேறு மொழிகளில் திறமையான நடிகையாக வலம் வந்தவர். மீனா நடிப்பில் மட்டுமல்லாமல் குணத்திலும் மிகவும் அன்பானவர். அடக்கமானவர். அவருக்கு இப்படி ஒரு நிலை வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. மீனா தன்னுடைய திரைப்படமான 'டபிள்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.
மேலும் செய்திகள்: ஜெபமலராய் புன்னகையை தெறிக்கவிடும் பிரியா பவானி ஷங்கர்... 'யானை' ஷூட்டிங் அன்சீன் போடோஸில் அவ்வளவு அழகு!!
மீனாவின் கணவர் இளம் வயதிலேயே உடல் நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ளது உச்சகட்ட சோகம். அவரது இழப்பால் மீனா கணவனை இழந்தும், அவரது மகள் நைனிகா அப்பாவை இழந்தும், தவித்து வருகின்றனர். இந்நிலையில் மீனாவின் கணவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் வீடியோ வெளியிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. பிரபலங்கள் பலரும் மீனாவின் கணவர் இறப்பிற்கு திரண்டு வந்து ஆறுதல் கூறி வரும் நிலையில் இவர் மட்டும் மெடிக்கல் சர்டிபிகேட் வெளியிடவில்லை என்பது கேட்பது என கண்டிக்கத்தக்கது. மேலும் மீனாவின் கணவர் மரணத்தை வைத்து பிழைப்பு நடத்துறியே நீ எல்லாம் ஒரு மனுஷனா... அசிங்கமாக இல்லையா என விழா மேடையில் திட்டி தீர்த்துள்ளார் தள்ளியுள்ளார் கே ராஜன்.
மேலும் செய்திகள்: படத்தில் மட்டும் தான் பாச மழையா? அப்பா - அம்மா மணிவிழாவில் கலந்து கொள்ளாத விஜய்! மனதை பாரமாக்கிய போட்டோஸ்!