இவ்வாறு சக்சஸ்புல் இயக்குனராக வலம் வரும் இவர், தனது தந்தையை ஸ்வீட்டாக பழிவாங்கிய சம்பவம் குறித்த சீக்ரெட் தகவல் வெளியாகி உள்ளது. சிறுவயதில் இருந்தே தனது பெயரை லோகேஷ் என்றே பயன்படுத்தி வந்த இவர் சினிமாவிற்கு வந்த பின்னர் தனது தந்தை கனகராஜின் பெயரையும் சேர்த்துக்கொண்டுள்ளார். ஏனெனில் லோகேஷ் எப்போதும் சினிமா சினிமா என்று சுற்றுவதைப் பார்த்த அவரது தந்தை கனகராஜ், நீ சினிமாவிலேயே மூழ்கி சாகப்போறியா என திட்டுவாராம்.
அதற்காகத்தான் சினிமாவில் வந்த பின்னர் அவரது பெயரையும் சேர்த்து பயன்படுத்தி வருகிறாராம் லோகேஷ். இதைப்பார்த்த அவரது தம்பி, ‘உன்ன அவன் ஸ்வீட்டா பழிவாங்குறான் பா’ என தன் தந்தையிடம் சொல்லுவான் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார்.