நடிகர் விஜய்யின் மகளா இது! மளமளவென வளர்ந்து ஹீரோயின் போல் ஜொலிக்கும் திவ்யா சாஷா -வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

First Published | Aug 27, 2022, 11:57 AM IST

Dhivya Sasha : நடிகர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, தன்னுடைய நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தமிழ் திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் தயாராகி வருகிறது. வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய், ஆப் டெவலப்பராக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்தாண்டு பொங்கலுக்கு இப்படம் திரை காண உள்ளது.

வாரிசு படத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளார் விஜய். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வருகிற அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது.

Tap to resize

இவ்வாறு பிசியான நடிகராக வலம் வரும் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் தந்தையைப் போல் சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்கள். இதனால் தான் நடித்த வேட்டைக்காரன் படத்தில் ஜேசன் சஞ்சயையும், தெறி படத்தில் திவ்யாவையும் நடிக்க வைத்துவிட்டார் விஜய்.

தெறி படத்தில் நடித்தபோது சின்னப்பெண்ணாக இருந்த திவ்யா சாஷா, தற்போது மளமளவென வளர்ந்துவிட்டார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

தன்னுடைய நண்பர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அதில் அவரைப் பார்க்கும்போது சினிமா ஹீரோயின் போலவே இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஷங்கர் மகள் அதிதியை போல் இவரும் சினிமாவில் ஹீரோயினாக வருவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படியுங்கள்... அட்லீக்கு நோ சொல்லிவிட்டு.. அவரின் உதவி இயக்குனருக்கு ஓகே சொன்ன ரஜினி- சூப்பர்ஸ்டாரின் அடுத்தபட டைரக்டர் இவரா?

Latest Videos

click me!