முதல் நாளை விட 2-ம் நாளில் 50 சதவீதம் வசூல் சரிவு... பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய லைகர்

First Published Aug 27, 2022, 11:04 AM IST

Liger : பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி உள்ள லைகர் திரைப்படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான படம் லைகர். தெலுங்கில் பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் தான் இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் விஜய் தேவரகொண்டா எம்.எம்.ஏ பைட்டராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ளார். மேலும் ரம்யா கிருஷ்ணன், மைக்டைசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்தி மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவான லைகர் படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் 25-ந் தேதி உலகமெங்கும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீசான இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறியது.

இதையும் படியுங்கள்... அட்லீக்கு நோ சொல்லிவிட்டு.. அவரின் உதவி இயக்குனருக்கு ஓகே சொன்ன ரஜினி- சூப்பர்ஸ்டாரின் அடுத்தபட டைரக்டர் இவரா?

மோசமான திரைக்கதை, விறுவிறுப்பில்லாத காட்சி அமைப்பு ஆகியவை இப்படத்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தன. நெகடிவ் விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படம் முதல் நாளில் ரூ.33 கோடி வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. இதில் அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படத்தின் முதல் நாள் வசூலை விட அதிகமாகும்.

இந்நிலையில், லைகர் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளியாகி உள்ளது. அதன்படி முதல் நாளை விட இரண்டாம் நாளில் மிகப்பெரிய அளவு சரிவை சந்தித்துள்ளது. இப்படம் இரண்டாம் நாளில் ரூ.16 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாம். இது முதல் நாளோடு ஒப்பிடுகையில் 50 சதவீதம் குறைவான வசூல் ஆகும். இன்றும் நாளையும் விடுமுறை நாட்களாக இருந்தாலும், இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதையும் படியுங்கள்... விக்ரமுக்கு கூட கம்மி தான்... பொன்னியின் செல்வனில் நடிக்க அதிக சம்பளம் வாங்கியது எந்த நடிகர் தெரியுமா?

click me!