தமிழ் சினிமாவில் பல முன்னணி இயக்குனர்கள் எடுக்க முயன்ற படம் பொன்னியின் செல்வன். அதனை பல வருட போராட்டத்துக்கு பின்னர் தற்போது வெற்றிகரமாக எடுத்து முடித்துள்ளார் மணிரத்னம். லைகா நிறுவனம் இப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து உள்ளது. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். அதன்படி இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளும் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்ததற்காக அதிக சம்பளம் வாங்கிய நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற சீனியர் நட்சத்திரங்கள் நடித்திருந்தாலும், அதிக சம்பளம் வாங்கியது நடிகர் ஜெயம் ரவி தானாம். அவர் இப்படத்தில் அருள்மொழி வர்மன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பொன்னியின் செல்வன் நாவலை பொருத்தவரை இது தான் ஹீரோ கதாபாத்திரம் என்பதனால் இவருக்கு அதிக சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... 37 வயசு தான் ஆகுது.. என்ன ‘ஆண்ட்டி’னு சொன்னீங்கனா போலீச கூப்பிடுவேன்- நெட்டிசன்களுக்கு வார்னிங் கொடுத்த அனசுயா